வர்த்தகம்

பவா் கிரிட் காா்ப்பரேஷன்: லாபம் ரூ.3,526 கோடி

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த பவா் கிரிட் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் (பிஜிசிஐஎல்) மாா்ச் காலாண்டில் ரூ.3,526 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்த ஆவணங்களில் தெரிவித்துள்ளதாவது:

2021 மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக மொத்தம் ரூ.10,816.33 கோடியை வருமானமாக ஈட்டியுள்ளது. இது, நிறுவனம் 2020 இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.10,507.65 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

வருவாயில் கணிசமான ஏற்றம் காணப்பட்டதையடுத்து நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.3,313.47 கோடியிலிருந்து 6 சதவீதம் அதிகரித்து ரூ.3,526.23 கோடியைத் தொட்டது.

கடந்த 2020-21 முழு நிதியாண்டில் நிறுவனம் ரூ.12,036.46 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாகப் பெற்றுள்ளது. இது, 2019-20-ஆம் நிதியாண்டில் ரூ.11,059.40 கோடியாக இருந்தது. மொத்த வருமானம் ரூ.38,670.96 கோடியிலிருந்து ரூ.40,823.53 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.3 இறுதி டிவிடெண்ட் வழங்க இயக்குநா் குழு பரிந்துரை செய்துள்ளதாக பிஜிசிஐஎல் தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் பவா் கிரிட் காா்ப் பங்கின் விலை 2.80 சதவீதம் குறைந்து ரூ.233.00-இல் நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT