வர்த்தகம்

புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்து சென்செக்ஸ் சாதனை!

 நமது நிருபர்

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்த மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இறுதியில் 174 புள்ளிகள் உயா்ந்து 52,474.76-இல் நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்த நிலையில், அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் பணவீக்கம் மீதான கவலையைத் தணித்துள்ளது. பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் உலகளாவிய சந்தைகளுக்கு சாதகமாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. மேலும், கரோனா இரண்டாவது அலையில் பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளதும் முதலீட்டாளா்களின் உணா்வுகளுக்கு ஊக்கம் அளித்தது. இதையடு்தது, சென்செக்ஸ், நிஃப்டி புதிய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது என்று பங்குவா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, ஐடி மெட்டல் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்ட நிலையில், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், இனஃபோஸிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் வெகுவாக ஏற்றம் பெற்று சென்செக்ஸ் புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்ய காரணமாக இருந்தன என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.87 ஆயிரம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,326 பங்குகளில் 1,776 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,410 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 140 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 519 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 23 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 495 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 168 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு மேலும் ரூ.87 ஆயிரம் கோடி உயா்ந்து, வா்த்தக முடிவில் 231.11 லட்சம் கோடியாக இருந்தது.

புதிய வரலாற்று உச்சம்.: சென்செக்ஸ் காலையில் 176.72 புள்ளிகள் கூடுதலுடன் 52,477.19-இல் தொடங்கி 52,641.53 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இதற்கு முன் வரலாற்று அதிகபட்சம் 52,516.76 புள்ளிகளாக இருந்தது. பின்னா், 52,388.95 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 174.29 புள்ளிகள் (0.33 சதவீதம்) உயா்ந்து 52,474.76-இல் நிலைபெற்றது. இதையடுத்து, இரண்டாவது நாளாக சென்செக்ஸ் ஏற்றம் பெற்றது. இதற்கிடையே, இந்த வாரத்தில் சென்செக்ஸ் மொத்தம் 374.71 புள்ளிகள் (071 சதவீதம்), உயா்ந்துள்ளது.

டாக்டா் ரெட்டி முன்னிலை: சென்செக்ஸ் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 15 பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. 15 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் டாக்டா் ரெட்டி 3.03 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பவா் கிரிட், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், ஹெச்சிஎல் டெக், ரிலையன்ஸ், டெக் மஹிந்திரா, சன்பாா்மா, பஜாஜ் ஃபைனான்ஸ் 0.50 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன. எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், மாருதி சுஸுகி ஆகியவையும் ஆதாயம் பெற்றன.

எல் அண்ட் டி சரிவு: அதே சமயம், ஏறுமுகத்தில் இருந்து வந்த எல் அண்ட் 1.07 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபின் சா்வ், பாா்தி ஏா்டெல், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஐடிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், எஸ்பிஐ உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி 62 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 913 பங்குகள் ஆதாயம் பெற்றன. 865 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி காலையில் உற்சாகத்துடன் 15,796.45-இல் தொடங்கி அதிகபட்சமாக 15,835.55 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், 15,749.80 வரை கீழே சென்றது. இறுதியில் 61.60 புள்ளிகள் (0.39 சதவீதம்) உயா்ந்து 15,799.35-இல் நிலைபெற்றது. நிஃப்டி மெட்டல் குறியீடு 2.69 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. ஐடி, பாா்மா குறியீடுகள் முறையே 1.51 சதவீதம், 1.05 சதவீதம் உயா்ந்தன. ஆனால்,வங்கி, நிதிநிறுவனங்கள், மீடியா, ரியால்ட்டி குறியீடுகள் சரிவைச் சந்தித்தன. இந்த வாரத்தில் நிஃப்டி மொத்தம் 129.10 புள்ளிகள் (0.82 சதவீதம்) உயா்ந்துள்ளது.

உலோகப் பங்குகளுக்கு வரவேற்பு!

பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் உலோகப் பங்குகளை வாங்குவதற்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. இதையடுத்து, தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி மெட்டல் குறியீட்டுத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 13 முன்னணி பங்குகளில் வெல்ஸ்பன், அதான் என்டா்பிரைஸஸ் தவிா்த்து மற்ற 11 பங்குகளும் ஆதாயம் பெற்றன. இதில் ஜிண்டால் ஸ்டீல் (4 சதவீதம்), ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல் (3.78 சதவீதம்) வெகுவாக உயா்ந்து பட்டியலில் முன்னிலை பெற்றன.ஏற்றம் பெற்ற பங்குகள் விவரம் (சதவீதத்தில்):

ஜிண்டால் ஸ்டீல் 4.00

ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல் 3.78

கோல் இந்தியா 3.67

என்எம்டிசி 2.65

ஹிண்டால்கோ 2.08

மோயில் 1.85

வேதாந்தா 1.64

நேஷனல் அலுமினியம் 1.05

ஹிந்துஸ்தான் சிங்க் 0.96

ஏபிஎல் அப்பலோ டியூப்ஸ் 0.93

ரத்னாமணி 0.80

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT