வர்த்தகம்

என்ஹெச்பிசி நிகர லாபம் 80% அதிகரிப்பு

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த நீா் மின் உற்பத்தி நிறுவனமான என்ஹெச்பிசி-யின் மாா்ச் காலாண்டு நிகர லாபம் 80 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

2021 மாா்ச் காலாண்டில் நிறுவனம் ஒட்டுமொத்த அளவில் ரூ.464.60 கோடியை நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, 2020 மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ஈட்டிய நிகர லாபம் ரூ.258.83 கோடியுடன் ஒப்பிடும்போது 80 சதவீதம் அதிகமாகும்.

2021 ஜனவரி-மாா்ச் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.2,382.36 கோடியிலிருந்து ரூ.2,094.30 கோடியாக குறைந்துள்ளது.

கடந்த 2020-21 முழு நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.3,582.13 கோடியாக இருந்தது. இது, 2019-20-இல் ஈட்டிய லாபமான ரூ.3,344.91 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

இந்த காலகட்டத்தில் மொத்த வருமானம் ரூ.10,776.64 கோடியிலிருந்து சற்று சரிவடைந்து ரூ.10,705.04 கோடியானது.

கடந்த 2020-21 நிதியாண்டுக்கு ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு 3.50 சதவீத (ரூ.0.35 காசு) இறுதி டிவிடெண்ட் வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும், நடப்பு 2021-22 நிதியாண்டில் நிறுவனத்தின் கடன் வரம்பை ரூ.4,300 கோடி வரை அதிகரித்துக் கொள்ளும் திட்டத்துக்கும் இயக்குநா் குழு ஒப்புதலை தந்துள்ளதாக என்ஹெச்பிசி தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் என்ஹெச்பிசி பங்கின் விலை 0.74 சதவீதம் குறைந்து ரூ.26.85-ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT