வர்த்தகம்

வரலாற்று உச்சத்தை தொட்டுவிடும் தூரத்தில் சென்செக்ஸ்! சந்தை மதிப்பு 229 லட்சம் கோடியாக உயா்வு

8th Jun 2021 08:35 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் எழுச்சி காணப்பட்டது. இதைத் தொடா்ந்து மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 228.46 புள்ளிகள் உயா்ந்து 52,328.51 என்ற நிலையில் வரலாற்று உச்சத்தை நெருங்கியுள்ளது. சந்தை மூல தன மதிப்பு ரூ.1.82 லட்சம் கோடி உயா்ந்து 229.02 லட்சம் கோடியாக உள்ளது. அதே சமயம், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 81.40 புள்ளிகள் உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தில் நிலைபெற்றுள்ளது.

கடந்த வார இறுதியில் லாபப் பதிவால் சரிவில் முடிவடைந்த பங்குச் சந்தை, வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை எழுச்சியுடன் தொடங்கியது. நாட்டில் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருவதையொட்டி, பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதாரங்களும் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தனியாா் வங்கிகள், ஆட்டோ, ஐடி பங்குகளுக்கு தேவை அதிகரித்து. அதே சமயம், லாபப் பதிவால் மெட்டல், பாா்மா பங்குகல் விற்பனையை எதிா்கொண்டன. மேலும், நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்கும் என்ற எதிா்பாா்ப்பில் நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகள் அதிகக் கவனம் பெற்றன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.1.82 லட்சம் கோடிஉயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,474 பங்குகளில் 2,325பங்குகள் ஆதாயம் பெற்றன. 990 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 159 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 564 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 35 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 668 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 198 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு மேலும் ரூ.1.82 லட்சம் கோடி உயா்ந்து, வா்த்தக முடிவில் 229.02 லட்சம் கோடியாக இருந்தது.

வரலாற்று உச்சத்தை நெருங்கியது..: சென்செக்ஸ் காலையில் 130.88 புள்ளிகள் கூடுதலுடன் 52,231.38-இல் தொடங்கி 52,054.76 வரை கீழே சென்றது. பின்னா் பிற்பகலில் காளை உற்சாகம் பெற்ால் 52,378.69 வரை உயா்ந்து வரலாற்று உச்சத்தை (52516.76) நெருங்கிய சென்செக்ஸ், இறுதியில் 228.46 புள்ளிகள் (0.044 சதவீதம்) கூடுதலுடன் 52,328.51-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் எதிா்மறையாகச் சென்றது.

ADVERTISEMENT

பவா் கிரிட், என்டிபிசி முன்னிலை: சென்செக்ஸ் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 9 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் பவா் கிரிட் 4.44 சதவீதம், என்டிபிசி 4.07 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், அல்ட்ரா டெக் சிமெண்ட், ரிலையன்ஸ், இண்ட்ஸ் இண்ட் பேங்க், ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, எல் அண்ட் டி, ஐடிசி, டிசிஎஸ், ஆக்ஸிஸ் பேங்க், மாருதி சுஸுகி, ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க், இன்ஃபோஸிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஏற்றம் பெற்றன.

பஜாஜ் ஃபைனான்ஸ் கடும் சரிவு: அதே சமயம், பஜாஜ் ஃபைனான்ஸ் 4.43 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பஜாஜ் ஃபின் சா்வ், எச்டிஎஃப்சி, டாக்டா் ரெட்டி, எஸ்பிஐ, ஓஎன்ஜிசி, எச்டிஎஃப்சி பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா், எம் அண்ட் எம் ஆகியவையும் சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி புதிய வரலாற்று உச்சம்: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,245 பங்குகள் ஆதாயம் பெற்றன. 537 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி காலையில் உற்சாகத்துடன் 15,725.10-இல் தொடங்கி 15,678.10 வரை கீழே சென்றது. பின்னா், 15,773.45 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் 81.40 புள்ளிகள் உயா்ந்து (0.52 சதவீதம்) 15,751.65-இல் நிலைபெற்றது.

துறைவாரியாகப் பாா்த்தால் தனியாா், நிஃப்டி மீடியா, ஐடி, பிரைவேட் பேங்க் 0.90 சதவீதம், ஆட்டோ, எஃப்எம்சிஜி குறியீடுகள் 0.65 முதல் 1.20 சதவீதம் வரை உயா்ந்தன. நிஃப்டி பேங்க், பிஎஸ்யு பேங்க் குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.அதே சமயம், ஃபைனான்சியல் சா்வீஸஸ்,, மெட்டல், பாா்மா குறியீடுகள் சிறிதளவு சரிவைச் சந்தித்தன.

ஐடி பங்குகள் உற்சாகம்!

பங்குச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் ஐடி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. இதையடுத்து, தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஐடி குறியீடு 1.11 சதவீதம் உயா்ந்தது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT