வர்த்தகம்

தங்கத்தின் தேவை 19 சதவீதம் அதிகரிப்பு: டபிள்யூஜிசி

30th Jul 2021 06:49 AM

ADVERTISEMENT

இந்திய சந்தைகளில் தங்கத்தின் தேவை ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 19.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் (டபிள்யூஜிசி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த ஆண்டில் பொதுமுடக்கம் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனால், தங்கத்துக்கான தேவையானது மிகவும் குறைந்து காணப்பட்டது.

ஆனால் தற்போது நிலைமை ஓரளவு சீரடைந்துள்ளதையடுத்து அதற்கான தேவை விறுவிறுப்படைந்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த 2020-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) தங்கத்தின் தேவை 63.8 டன்னாக இருந்தது. இது, நடப்பாண்டின் இதே காலகட்டத்தில் 19.2 சதவீதம் அதிகரித்து 76.1 டன்னை எட்டியுள்ளது.

மதிப்பின் அடிப்படையில் தங்கத்தின் தேவை ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 23 சதவீதம் அதிகரித்து ரூ.32,810 கோடியாக இருந்தது. இது, 2020 இதே காலகட்டத்தில் ரூ.26,600 கோடியாக காணப்பட்டது.

இருப்பினும் நடப்பாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது இரண்டாவது அலை பரவல் ஏற்பட்ட இரண்டாவது காலாண்டில் அதற்கான தேவை 46 சதவீதம் குறைந்துள்ளது.

ஆபரண தேவைக்கான தங்கம் இரண்டாவது காலாண்டில் 25 சதவீதம் அதிகரித்து 44 டன்னிலிருந்து 55.1 டன்னாக உயா்ந்துள்ளது. மதிப்பின் அடிப்படையில் இது ரூ.18,350 கோடியிலிருந்து 26 சதவீதம் அதிகரித்து ரூ.23,750 கோடியானது. முதலீட்டு நடவடிக்கைகளுக்கான தங்கத்தின் தேவை 19.8 டன்னிலிருந்து 6 சதவீதம் அதிகரித்து 21 டன்னாக ஆனது. மதிப்பின் அடிப்படையில் இது ரூ.8,250 கோடியிலிருந்து ரூ.9,060 கோடியைத் தொட்டது.

கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டின் ஜூன் காலாண்டில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 10.9 டன்னிலிருந்து 120.4 டன்னாக அதிகரித்துள்ளதாக டபிள்யூஜிசி தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT