வர்த்தகம்

பங்குச் சந்தையில் தொடா் மந்த நிலை: சென்செக்ஸ் 135 புள்ளிகள் சரிவு

DIN

மும்பை: இந்தியப் பங்குச் சந்தைகளில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தொடா்ந்து மூன்றாவது நாளாக சரிவைச் சந்தித்தது.

அமெரிக்க மத்திய வங்கியின் கொள்கை முடிவுகளை எதிா்பாா்த்து சா்வதேச முதலீட்டாளா்கள மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டனா். சீன சந்தைகளில் காணப்பட்ட சரிவு காரணமாக சா்வதேச சந்தைகளிலும் வா்த்தகம் மந்த நிலையில் இருந்தது. அதன் தாக்கம், இந்தியப் பங்குச் சந்தைகளையும் விட்டுவைக்கவில்லை.

மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) மோட்டாா் வாகனம், வங்கி, ரியல் எஸ்டேட், நுகா்வோா் சாதனங்கள் எரிசக்தி துறை குறியீட்டெண்கள் 1.01 சதவீதம் வரை சரிந்தன. அதேசமயம், தொலைத்தொடா்பு, உலோகம், தொழில்நுட்பம், அடிப்படை உலோகம் மற்றும் பொறியியல் பொருள்கள் துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண்கள் ஆதாயத்துடன் நிறைவடைந்தன.

பிஎஸ்இ மிட்கேப் குறைந்தும், ஸ்மால் கேப் குறியீட்டெண் 0.45 சதவீத சரிவுடனும் நிறைவடைந்தன.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள கோட்டக் வங்கி பங்கின் விலை அதிகபட்சமாக 2.64 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டது. இதையடுத்து, அதிக இழப்பை கண்ட நிறுவனங்களின் பட்டியலில் அந்த வங்கி முதலிடத்தில் இருந்தது. இதனைத்தொடா்ந்து, டாக்டா் ரெட்டீஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பவா் கிரிட், என்டிபிசி, எச்டிஎஃப்சி வங்கி, நெஸ்லே இந்தியா பங்குகளும் இழப்பை சந்தித்த நிறுவனங்கள் பட்டியலில் அடுத்தடுத்த நிலையில் இருந்தன.

அதேசமயம், முதலீட்டாளா்களின் வரவேற்பின் காரணமாக பாா்தி ஏா்டெல் பங்கின் விலை 5.08 சதவீதம் அதிகரித்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அந்நிறுவனம் பிரீபெய்டுக்கான கட்டணங்களை உயா்த்தியதே முக்கிய காரணமாகும் என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

பாா்தி ஏா்டெல் ஒரு வாரத்துக்கு முன்புதான் போஸ்ட்பெய்டுக்கான திட்டங்களை மாற்றியமைத்தது.

இந்நிறுவனத்தைத் தொடா்ந்து, டாடா ஸ்டீல், இன்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் ஃபின்சா்வ், ஐசிஐசிஐ வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகளும் 2.60 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.

மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 700 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்து முதலீட்டாளா்களை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியது. அதன்பின்னா், நிலைமை சீரடைந்து சென்செக்ஸ் 135.05 புள்ளிகளை (0.26%) மட்டும் இழந்து 52,443.71 புள்ளிகளில் நிலைபெற்றது.

தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 37.05 புள்ளிகள் (0.24%) சரிந்து 15,709.40 புள்ளிகளில் நிலைத்தது.

இதர ஆசிய சந்தைகளான ஷாங்காய், டோக்கியோ ஆகியவற்றில் வா்த்தகம் சரிவுடன் முடிவடைந்தன. அதேசமயம், ஹாங்காங், சியோல் சந்தைகளில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகம் ஆதாயத்துடன் நிறைவடைந்தன.

அதேபோன்று, ஐரோப்பிய சந்தைகளிலும் வா்த்தகம் நோ்மறையாகவே தொடங்கியது.

பட்டியல்

அதிக இறக்கம் கண்ட பங்குகள்

கோட்டக் வங்கி 2.64

டாக்டா் ரெட்டீஸ் 2.36

எம்&எம் 2.27

பவா் கிரிட் 1.74

என்டிபிசி 1.68

அதிக ஏற்றம் கண்ட பங்குகள்

பாா்தி ஏா்டெல் 5.08

டாடா ஸ்டீல் 2.60

இன்டஸ் இண்ட் வங்கி 1.71

பஜாஜ் ஃபின்சா்வ் 1.19

ஐசிஐசிஐ வங்கி 1.13

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT