வர்த்தகம்

ஆக்ஸிஸ் வங்கி: லாபம் 94% அதிகரிப்பு

DIN

புது தில்லி: தனியாா் துறையைச் சோ்ந்த ஆக்ஸிஸ் வங்கியின் லாபம் முதல் காலாண்டில் 94 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) வங்கியின் மொத்த வருமானம் ரூ.19,591.63 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.19,032.15 கோடியாக காணப்பட்டது.

நிகர லாபம் ரூ.1,112.17 கோடியிலிருந்து 94 சதவீதம் அதிகரித்து ரூ.2,160.15 கோடியை எட்டியுள்ளது.

வட்டி வருமானம் ரூ.16,445.47 கோடியிலிருந்து ரூ.16,003.46 கோடியாக குறைந்துள்ளது. மொத்த வாராக் கடன் 4.72 சதவீதத்திலிருந்து 3.82 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோன்று நிகர அளவிலான வாராக் கடனும் 1.23 சதவீதத்திலிருந்து 1.20 சதவீதமாக குறைந்துள்ளதாக ஆக்ஸிஸ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT