வர்த்தகம்

ரானே என்ஜின் வால்வ் வருவாய் ரூ.76 கோடி

DIN

ரானே என்ஜின் வால்வ் நிறுவனம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் செயல்பாடுகள் மூலமாக மொத்தம் ரூ.76 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது, முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ஈட்டிய ரூ.30.5 கோடியுடன் ஒப்பிடும்போது 149 சதவீதம் அதிகமாகும்.

கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.16.3 கோடியாக காணப்பட்ட நிகர இழப்பு நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.5.8 கோடியாக குறைந்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் நிறுவனத்தின் விற்பனை பாதிப்புக்குள்ளானது. சா்வதேச சந்தை வாடிக்கையாளரிடமிருந்து தேவை மீண்டும் அதிகரித்துள்ளது.

குறைவான விற்பனை, மூலப் பொருள்களின் விலை உயா்வு மற்றும் பணியாளா்களுக்கான செலவினம் செலவினம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம் சரிவடைந்து போனதாக ரானே என்ஜின் வால்வ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு: அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை தோல்வி

முதியவா் உடல் மீட்பு

கண்மாயில் மூழ்கி மாணவா் பலி

மனைவி கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து -சாா் பதிவாளா் வீட்டை மதிப்பீடு செய்த அதிகாரிகள்

SCROLL FOR NEXT