வர்த்தகம்

மைக் மற்றும் ஸ்பீக்கருடன் எல்ஜி அறிமுகப்படுத்தியுள்ள முகக்கவசம் - வேறு என்ன சிறப்புகள் ?

23rd Jul 2021 12:25 PM

ADVERTISEMENT

பேசுவதை இலகுவாக்க மைக் மற்றும் ஸ்பீக்கருடன் முகக்கவசத்தை எல்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

கரோனா தொற்று பரவலைத் தடுப்பதில் முகக்கவசம்  முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் முகக்கவசம் அணிந்திருக்கும்போது ஒரு சிலருக்கு பேசுவது மற்றும் மூச்சு விடுவது சிரமமாக இருக்கும். ஆனால் இதற்காக முகக்கவசம் அணிவதைத் தவிர்க்க முடியாது. 

இந்த சிக்கலைத் தீர்க்க எல்ஜி நிறுவனம் ஒரு புதிய முகக்கவசத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. காற்றை சுத்தப்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த முகக்கவசத்தில் நாம் பேசுவது வெளியில் கேட்கும் வகையில் மைக் மற்றும் ஸ்பீக்கர் இடம் பெற்றுள்ளது. 

எல்ஜி பியூரிகேர் வியரபில் ஏர் பியூரிஃபையர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முகக்கவசம் எடைக் குறைந்ததாக உள்ளது. இதன் எடை வெறும் 94 கிராம் தான். இதனால் இந்த முகக் கவசத்தை இலகுவாக அணிய முடியும். இதில் 1000எம்ஏ பேட்டரி இருப்பதால், 2 மணி நேரம் வரை சார்ஜ் செய்தால், 8 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். யுஎஸ்பி கேபிள் மூலம் சார்ஜ் செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதில் ஸ்பீக்கர் மற்றும் மைக் இடம் பெற்றுள்ளதால் பேசும்போது ஒவ்வொரு முறையும் மாஸ்க்கை நீக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது. மேலும் இதில் உள்ள வாய்ஸ் ஆன் என்ற தொழில்நுட்பம் பயனர்கள் பேசும்போது அதனை உணர்ந்து, இதில் உள்ள ஸ்பீக்கர் மூலம் சத்தத்தைப் பெரிதாக்கி கொடுக்கும். இதனால் உங்களுடன் பேசுபவர்களுக்கு எளிதாக உங்கள் குரல் கேட்கும். 

இதில் உள்ள எல்ஜி டூயல் எனப்படும் விசிறி, பயனர்கள் மூச்சு விடும் முறையைக் கணித்து, அதற்கேற்றார் போல் காற்றின் போக்கைக் கட்டுப்படுத்தி, மூச்சு விடுவதை இலகுவாக்கும். இந்த முகக்கவசம் வருகிற ஆகஸ்ட் மாதம் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்படும். அதன் பிறகு மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு வரும். இதன் விலை குறித்து எல்ஜி நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. 

Tags : LG Face Mask LG PuriCare Wearable Air Purifier
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT