வர்த்தகம்

ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளிய ஸியோமி

17th Jul 2021 12:54 PM

ADVERTISEMENT

 

ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளிய   ஸியோமி  உலகளாவிய வர்த்தகத்தில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப புரட்சியில் நாளுக்கு நாள்  திறனை மேம்படுத்திக்கொள்கிற நிறுவனங்கள் தங்களை வணிகத்தில் ஆழமாக நிறுவிக்கொள்கின்றன. இந்த நோய்த்தொற்று காலத்தில் செல்லிடபேசிகளின் தேவை அதிகரித்து வந்த  நிலையில் தற்போது சீனாவை தலைமையிடமாக கொண்டு  ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஸியோமி,  இந்த கரோனா தொற்றுக்காலத்தில்  விற்பனையில் அபாரமான வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

 ஸ்மார்ட்போன்  விற்பனை சந்தையில் 19 சதவீதத்துடன்  முதல் இடத்தில் இருக்கும் சாம்சங் நிறுவனத்திற்கு   அடுத்த படியாக 17 சதவீதத்துடன்  இரண்டாம் இடத்தில் ஸியோமி இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக 14 சதவீத வளர்ச்சியுடன் ஆப்பிள் நிறுவனம் மூன்றாம் இடத்திலும் ஓப்போ மற்றும் விவோ நிறுவனங்கள் அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றன. இருப்பினும் ஸியோமி நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில்  விற்பனையில் உலகம் முழுக்க பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக சந்தைகளை ஆய்வு செய்யும் நிறுவனமான கானலிஸ் தெரிவித்திருக்கிறது.

ADVERTISEMENT

ஸியோமி நிறுவனம்  வெளிநாடுகளில் விற்பனை செய்யும் ஸ்மார்ட்போன்களின் வர்த்தகம்  முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வேகம் எடுத்திருக்கிறது. குறிப்பாக லத்தீன் அமெரிக்காவில் 300 சதவீதத்திற்கும், ஆப்பிரிக்காவில் 150 சதவீதத்திற்கும், மேற்கு ஐரோப்பாவில் 50 சதவீதத்திற்கும் மேலாக அதன் வர்த்தகம்  அதிகரித்துள்ளன என  கேனலிஸ் ஆராய்ச்சி மேலாளர் பென் ஸ்டாண்டன் கூறியிருக்கிறார்.

மேலும் ஸியோமி வளர்ச்சியை நோக்கி நகர்வதால் அது புதிய சந்தையை உருவாக்கும் என்றும் தற்போது கையிருப்பில் இருக்கிற பழைய ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்துவதில் கவனம் செலுத்திவருகிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

சாம்சங் மற்றும்  ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் விலையைக் காட்டிலும் சராசரி விற்பனை விலை  40 சதவீதம்  முதல் 70 சதவீதம் வரை ஸியோமி ஸ்மார்ட்போன்கள் விலை குறைவு என்பதால் தனக்கான சந்தையை தக்கவைத்திருக்கிறது.  அதனால் அதன் முதன்மை தயாரிப்புகளான M 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களின்   விற்பனை மடங்கு  அதிகரித்திருக்கிறது. இதேபோல்   ஓப்போ மற்றும் விவோ நிறுவனங்கள் பெரிய முதலீட்டில் குறைவான விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து  வருவதால் ஸியோமி  நிறுவனத்திற்கு போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

2021 இரண்டாவது காலாண்டில்  உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 12 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் , கரோனா ஏற்படுத்திய தாக்கத்தாலும் தடுப்பூசிகளின் வருகையாலும்  பொருளாதாரம் பற்றிய பார்வை மாறியிருக்கிறது என அவர் தெரிவித்திருந்தார்.

" தற்போது நிலவி வருகிற உலகளாவிய ஸ்மார்ட்போன் பற்றாக்குறையில்  பல நிறுவனங்களும் தங்கள் பொருள்களை பாதுகாக்கவும் விற்பனை செய்வதிலும் கடுமையாக போராடி வருகிற நிலையில், ஸியோமி தனக்கான வாடிக்கையாளர்களை தக்கவைத்திருக்கிறது. மேலும் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதல் இடத்தில் இருக்கும் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளவும் தயாராகிக்கொண்டிருக்கிறது" என  ஸ்டாண்டன் கூறியிருக்கிறார்.
 

Tags : xiomi smart phone
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT