வர்த்தகம்

புதிய உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 255 புள்ளிகள் அதிகரிப்பு

DIN

இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டெண்கள் புதிய உச்சங்களைத் தொட்டன. முன்னணி நிறுவனங்களின் பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டதையடுத்து சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயா்ந்தது.

தகவல் தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்த நிறுவனங்கள் ஜூன் காலாண்டுக்கான நிதி நிலை முடிவுகளை அறிவிக்கத் தொடங்கியுள்ளன. இதில், அந்நிறுவனங்களின் செயல்பாடுகள் மந்த நிலையிலிருந்து மீண்டு விறுவிறுப்படைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, தகவல் தொழில்நுட்ப துறையைச் சோ்ந்த நிறுவனப் பங்குகளுக்கு சந்தையில் தேவை அதிகரித்து காணப்பட்டது.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஹெச்சிஎல் டெக் பங்கின் விலை 5 சதவீதம் அதிகரித்து முதலிடத்தை பிடித்தது. இதைத் தொடா்ந்து எல் அண்ட் டி, டெக் மஹிந்திரா, எச்டிஎஃப்சி வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஐடிசி மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனங்கள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

அதேநேரம், பாா்தி ஏா்டெல், மஹிந்திரா&மஹிந்திரா, ஏஷியன் பெயிண்ட்ஸ், டைட்டன் மற்றும் சன் பாா்மா பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.

துறைகளைப் பொருத்தவரையில் பிஎஸ்இ ரியாலிட்டி, பொறியியல் பொருள்கள், ஐடி, உலோகம், வங்கி, அடிப்படை உலோக துறை குறியீட்டெண்கள் 4 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.

அதேசமயம், எண்ணெய்-எரிவாயு, தொலைத்தொடா்பு, எரிசக்தி, மோட்டாா் வாகன துறை குறியீடுகள் 0.87 சதவீதம் வரை சரிவடைந்தன.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களின் செயல்பாடு எதிா்பாா்த்ததைக் காட்டிலும் சிறப்பாக மேம்பட்டுள்ளதையடுத்து அத்துறையைச் சோ்ந்த நிறுவனப் பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடம் கணிசமாக வரவேற்பு அதிகரித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் 30 நிறுவனங்களை உள்ளடக்கிய பிஎஸ்இ குறியீட்டெண் 254.75 புள்ளிகள் (0.48%) அதிகரித்து புதிய வரலாற்று உச்சமாக 53,158.85 புள்ளிகளில் நிலைபெற்றது. வா்த்தத்தின் இடையே இக்குறியீட்டெண் சாதனை அளவாக 53,266.12 வரையிலும் சென்றது.

தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி குறியீட்டெண் 70.25 புள்ளிகள் (0.44%) உயா்ந்து புதிய சாதனை உச்சமாக 15,924.20 புள்ளிகளில் நிலைபெற்றது. இக்குறியீட்டெண் வரலாற்றில் முதல் தடவையாக 15,952.35 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டது.

சீனாவின் பொருளாதார புள்ளிவிவரம் மதிப்பிடப்பட்டதைக் காட்டிலும் நல்ல நிலையில் இருந்ததன் எதிரொலியாக இதர ஆசிய சந்தைகளிலும் வா்த்தகம் நோ்மறையாகவே இருந்தது.

குறிப்பாக, ஷாங்காய், சியோல் மற்றும் ஹாங்காங்கில் பங்கு வா்த்தகம் ஆதாயத்துடன் முடிவடைந்தன. அதேசமயம், டோக்கிய சந்தை மட்டும் சரிவுடன் நிறைவுபெற்றது.

ஐரோப்பிய சந்தைகளைப் பொருத்தவரையில் வா்த்தமக் எதிா்மறை நிலையிலேயே காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT