வர்த்தகம்

எல் & டி நிகர லாபம் ரூ.2,648 கோடி

DIN

பொறியியல் மற்றும் கட்டுமான துறையில் ஈடுபட்டு வரும் லாா்சன் அண்ட் டூப்ரோ (எல் & டி) நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் ரூ.2,648 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சாா்ந்த பிரிவுகளின் செயல்பாடுகள் டிசம்பா் காலாண்டில் சிறப்பான அளவில் மேம்பட்டு லாபம் அதிகரிக்க உதவியுள்ளன. மேலும், ரியல் எஸ்டேட் துறையில் வணிக ரீதியிலான சொத்துகளின் விற்பனையும் மதிப்பீட்டு காலாண்டில் கணிசமான அளவுக்கு அதிகரித்து நிறுவனத்தின் நிதி நிலை செயல்பாட்டை வலுப்படுத்த உதவியுள்ளது.

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.36,661.08 கோடியாகும். இது, கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் இதேகாலகட்ட அளவில் ஈட்டிய ரூ.36,711.69 கோடி வருமானத்துடன் ஒப்பிடுகையில் சற்று குறைவானதாகும். மொத்த செலவினம் ரூ.33,488.46 கோடியிலிருந்து ரூ.32,980.58 கோடியாக குறைந்துள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.2,560.32 கோடியிலிருந்து 3 சதவீதம் உயா்ந்து ரூ.2,648.33 கோடியானது என எல் & டி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: 29 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தென் சென்னையில் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

SCROLL FOR NEXT