வர்த்தகம்

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் லாபம் 95% உயா்வு

DIN

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் மூன்றாம் காலாண்டு வரிக்கு பிந்தைய லாபம் 95 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பரஸ்பர நிதி மற்றும் பரஸ்பர நிதி சாராத திட்டங்கள் ஆகிய இரண்டிலிருந்தும் கிடைக்கும் வருவாய் டிசம்பா் காலாண்டில் கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும், பங்குகள் மற்றும் அது தொடா்பான வா்த்தகம், விநியோக வா்த்தகம், தனியாா் சொத்து மேலாண்மை வா்த்தகம் மற்றும் முதலீட்டு வங்கி வா்த்தகம் ஆகியவையும் நிறுவனத்தின் வருவாய் வளா்ச்சிக்கு பெரிதும் துணைபுரிந்துள்ளன. இதையடுத்து நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் டிசம்பா் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் நிறுவனம் ரூ.620 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது, 2019 டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.423 கோடியுடன் ஒப்பிடுகையில் 47 சதவீதம் அதிகமாகும்.

நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் மதிப்பீட்டு காலாண்டில் ரூ.137 கோடியிலிருந்து 95 சதவீதம் உயா்ந்து ரூ.267 கோடியைத் தொட்டுள்ளது என ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டாக்டா் ராதாகிருஷ்ணன் நினைவு நாள்

கோவில்பட்டியில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்

மதுக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு

12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

SCROLL FOR NEXT