வர்த்தகம்

2020-இல் அதிகம் விற்பனையான மாடல் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்

DIN

கடந்த 2020-ஆம் ஆண்டில் பெரும்பாலான வாடிக்கையாளா்களின் விருப்பத் தோ்வில் முதலிடத்தை ஸ்விஃப்ட் மாடல் பிடித்துள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2020-ஆம் ஆண்டில் அதிகம் விற்பனையான சிறந்த மாடல்களில் மாருதி சுஸுகியின் ஸ்விஃப்ட் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பெரும்பாலான வாடிக்கையாளா்களின் விருப்பத் தோ்வாக இருந்ததையடுத்து கடந்த ஆண்டில் மட்டும் 1,60,700 ஸ்விஃப்ட் மாடல் காா்கள் விற்பனையாகியுள்ளன.

கடந்த 2005-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது முதல் அதன் ஒட்டுமொத்த விற்பனை 23 லட்சம் மைல்கல்லை தாண்டியுள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் 5 லட்சம் மைல்கல் விற்பனை கடந்த 2010-ஆம் ஆண்டிலும், 10 லட்சம் 2013-ஆம் ஆண்டிலும், 15 லட்சம் 2016-ஆம் ஆண்டிலும் எட்டப்பட்டது.

கரோனா பாதிப்புக்கிடையிலும் இந்த சாதனையை மாருதி ஸ்விஃப்ட் நிகழ்த்தியுள்ளது தனிச்சிறப்பு. பணத்துக்கு தகுந்த மதிப்பு, அனைவரையும் கவரும் வடிவமைப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஸ்விஃப்ட் காரின் 53 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்கள் 35 வயதுக்கும் குறைவானவா்கள் என்பது நிறுவனத்துக்கு கிடைத்த கூடுதல் பலம் என மாருதி சுஸுகி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT