வர்த்தகம்

பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் தொடக்கம்

22nd Jan 2021 10:37 AM

ADVERTISEMENT

பங்குச்சந்தை வணிகம் நேற்று உச்சத்தை எட்டிய நிலையில் இன்று (ஜன. 22) காலை சரிவுடன் தொடங்கியது. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 171 புள்ளிகள் சரிந்து 49,515.98 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.19 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 45.15 புள்ளிகள் சரிந்து 14,571.40 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.14 சதவிகிதம் சரிவாகும்.

இதில் பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசூகி, எம்&எம் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன. பஜாஜ் ஆட்டோ 7.70 சதவிகிதமும், மாருதி சுசூகி 2.22 சதவிகிதமும், எம்&எம் 1.61 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

எனினும் ஆக்ஸிஸ் வங்கி, கோட்டாக் வங்கி, ஐசிஐசிஐ, டெக் மஹிந்திரா போன்றவற்றின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

அமெரிக்காவில் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதைத் தொடர்ந்து எழுந்துள்ள அரசியல்-பொருளாதார நிலவரத்தின் எதிரொலியாக வரலாற்றில் முதன்முறையாக 50 ஆயிரம் புள்ளிகளை கடந்து இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்ட நிலையில், இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது.
 

Tags : சென்செக்ஸ்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT