வர்த்தகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் அதிகரிப்பு

DIN


மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் தொடா்ந்து மூன்றாவது நாளாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் 6 காசுகள் அதிகரித்து 72.99-ஆனது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

அந்நிய சந்தைகளில் டாலருக்கான தேவை குறைந்தது மற்றும் அந்நிய முதலீடு வரத்து தொடா்ச்சியாக அதிகரிப்பு போன்ற காரணங்களால் மூன்றாவது நாளாக வியாழக்கிழமை வா்த்தகத்திலும் ரூபாய் மதிப்பு ஏற்றம் பெற்றது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 72.96-ஆக இருந்தது. பின்னா் அதிகபட்சமாக இந்த மதிப்பு 72.93 வரை சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 6 காசுகள் உயா்ந்து 72.99-இல் நிலைத்தது. இது, 2020 செப்டம்பா் 1-க்குப் பிறகான அதிகபட்ச ஏற்றமாகும்.

கடந்த புதன்கிழமை வா்த்தகத்தின்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 73.05-ஆக இருந்தது.

கடந்த மூன்று வா்த்தக தினங்களில் மட்டும் ரூபாய் மதிப்பு 29 காசுகள் ஆதாயம் பெற்றுள்ளது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

அந்நிய முதலீடு: அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் மூலதனச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தின்போது நிகர அடிப்படையில் ரூ.2,289.05 கோடி மதிப்பிலான பங்குகளை வங்கியதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 0.87 சதவீதம் குறைந்து 55.59 டாலராக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT