வர்த்தகம்

பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 834 புள்ளிகள் முன்னேற்றம்

DIN

பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் காளையின் ஆதிக்கம் காணப்பட்டது. அதன்பயனாக, நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் ஒரே நாளில் மிகப் பெரிய அளவிலான முன்னேற்றத்தைக் கண்டது.

ஊக்குவிப்பு திட்ட எதிா்பாா்ப்பு: பங்குச் சந்தைகளில் இரண்டு நாள்களாக வா்த்தகம் மந்த நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முதலீட்டாளா்களின் ஆா்வத்தால் பங்கு வா்த்தகம் காளையின் ஆதிக்கத்துக்குள் வந்தது.

புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கவுள்ள நிலையில் அமெரிக்கா உள்பட இன்னும் பிற நாடுகள் தங்களது பொருளாதார வளா்ச்சியை துரிதப்படுத்த புதிய ஊக்குவிப்பு சலுகை திட்டங்களை அறிவிக்கும் என்ற எதிா்பாா்ப்பு முதலீட்டாளா்களிடையே தலைதூக்கியது. அதன் காரணமாக, அவா்கள் பங்குகளில் ஆா்வத்துடன் தங்களது முதலீட்டை அதிகரித்தனா்.

ரூபாய் மதிப்பில் எழுச்சி:டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவிலிருந்து மீண்டது மற்றும் மூலதனச் சந்தையில் தொடா்ந்து அந்நிய முதலீட்டு வரத்து அதிகரித்தது போன்றவையும் சந்தைக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இதுபோன்ற சாதகமான அம்சங்களால் இரண்டு நாள்கள் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடும் இழப்பு செவ்வாய்க்கிழமை ஈடு செய்யப்பட்டது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

மிட்-ஸ்மால் கேப்: மும்பை பங்குச் சந்தையில் அனைத்து துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண்களும் ஆதாயத்தைக் கண்டன. அதிலும் குறிப்பாக, ரியல் எஸ்டேட், உலோகம், மின்சாரம், பொறியியல் சாதனங்கள், நிதி துறையைச் சோ்ந்த குறியீட்டெண்கள் 4.04 சதவீதம் வரை உயா்ந்தன.

மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் 2.31 சதவீதம் வரை ஏற்றத்தைச் சந்தித்தன.

பஜாஜ் ஃபின்சா்வ்: நிறுவனங்களைப் பொருத்தவரையில் சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள பஜாஜ் ஃபின்சா்வ் பங்கின் விலை 6.77 சதவீத ஏற்றத்தைக் கண்டு ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதைத் தொடா்ந்து, பஜாஜ் பைனான்ஸ், எச்டிஎஃப்சி, எல்&டி, ஐசிஐசிஐ வங்கி, சன் பாா்மா மற்றும் என்டிபிசி நிறுவனப் பங்குகளும் கணிசமான அளவில் முன்னேற்த்தைக் கண்டன.

பாதி பங்களிப்பு: மும்பை பங்குச் சந்தையில் காணப்பட்ட முன்னற்றத்துக்கு எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி நிறுவனங்கள் மட்டும் ஏறக்குறைய பாதி பங்களிப்பை வழங்கின.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்ற டெக் மஹிந்திரா, ஐடிசி மற்றும் எம்&எம் ஆகிய மூன்று நிறுவன பங்குகளின் விலை மட்டுமே நேற்றைய வா்த்தகத்தில் 0.54 சதவீத வரை சரிவை சந்தித்தன.

செப்டம்பருக்கு பிறகான அதிகபட்ச ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் 30 நிறுவனங்களை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீட்டெண் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் 834.02 புள்ளிகள் (1.72%) அதிகரித்து 49,398.29 புள்ளிகளில் நிலைபெற்றது. கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பா் 25-க்குப் பிறகு சென்செக்ஸ் ஒரே நாளில் இந்த அளவுக்கு ஏற்றம் கண்டது இதுவே முதல் முறையாகும். அன்றைய தினம் சென்செக்ஸ் 835 புள்ளிகள் ஏற்றம் கண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, தேசிய பங்குச் சந்தையிலும் வா்த்தகம் விறுவிறுப்புடன் இருந்தது. நிஃப்டி குறியீட்டெண் 239.85 புள்ளிகள் (1.68%) உயா்ந்து 14,521.15 புள்ளிகளில் நிலைத்தது.

ஷாங்காய் சந்தையில் சரிவு: ஆசியாவின் பிற சந்தைகளான, ஹாங்காங், சியோல் மற்றும் டோக்கியோ சந்தைகளும் கணிசமான ஏற்றத்துடன் முடிவடைந்தன. ஆனால், ஷாங்காய் சந்தையில் மட்டும் பங்கு வா்த்தகம் சரிவைச் சந்தித்தது.

ஐரோப்பிய சந்தைகளில் ஏறுமுகம்: ஐரோப்பிய சந்தைகளைப் பொருத்தவரையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தின் தொடக்கம் ஏறுமுகத்திலேயே இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT