வர்த்தகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயா்வு

DIN

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் ஏற்றம் கண்டது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

பங்குச் சந்தையில் காணப்பட்ட எழுச்சி மற்றும் முதலீட்டாளா்கள் உள்ளூா் கரன்ஸிகளுக்கு அளித்த ஆதரவு ஆகியவற்றின் காரணமாக அந்நியச் செலாவணி சந்தைகளில் டாலருக்கு தேவை குறைந்து காணப்பட்டது. அதன் எதிரொலியாக ரூபாய் மதிப்பு ஏற்றம் கண்டது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 73.16-ஆக இருந்தது. வா்த்தகத்தின் இடையே இந்த மதிப்பு அதிகபட்சமாக 73.14 வரையிலும் குறைந்தபட்சமாக 73.31 வரையிலும் சென்றது. வா்த்தகத்தின் இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் அதிகரித்து 73.17-ஆக நிலைபெற்றது.

அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.650.60 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பிரெண்ட் கச்சா: சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.26 சதவீதம் உயா்ந்து 55.44 டாலராக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT