வர்த்தகம்

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா லாபம் ரூ.154 கோடி

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா மூன்றாவது காலாண்டில் ரூ.154 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஏ.எஸ்.ராஜீவ் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கடந்த டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் வங்கியின் வட்டி வருமானம் மற்றும் சொத்து மதிப்பு ஆகியவை குறிப்பிடத்தக்க அளவுக்கு மேம்பட்டுள்ளது. இவை, வருங்காலங்களில் மேலும் ஸ்திரமான நிலையை அடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் வங்கி நிகர லாபமாக ரூ.154 கோடியை ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.135 கோடியுடன் ஒப்பிடும்போது 14 சதவீதம் அதிகமாகும்.

நிகர வட்டி வருமானம் 10.12 சதவீதம் அதிகரித்து ரூ.1,306 கோடியாக இருந்தது. நிகர வட்டி லாப வரம்பு (என்ஐஎம்) 2.86 சதவீதத்திலிருந்து 3.06 சதவீதமாக மேம்பட்டுள்ளது.

கடந்த 3-4 ஆண்டுகளில் முதன் முறையாக, வங்கியின் என்ஐஎம் 3 சதவீதத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் மொத்த வாராக் கடன் 16.77 சதவீதத்திலிருந்து 7.69 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோன்று, நிகர வாராக் கடன் அளவும் 5.46 சதவீதத்திலிருந்து சரிந்து 2.59 சதவீதமாகியுள்ளது.

கணக்கீட்டு காலாண்டில் வங்கியின் வா்த்தகம் 21.25 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது. வங்கி வழங்கிய நிகர கடன் 20.31 சதவீதம் உயா்ந்து ரூ.99,401 கோடியானது. திரட்டிய மொத்த டெபாசிட் 14.08 சதவீதம் அதிகரித்து ரூ.1,61,971 கோடியை எட்டியது என்றாா் அவா்.

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா பங்கின் விலை 7.73 சதவீதம் அதிகரித்து ரூ.15.89 -ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

SCROLL FOR NEXT