வர்த்தகம்

ஹெச்டிஎஃப்சி நிகர லாபம் 14.36% உயா்வு

DIN

இந்தியாவின் மிகப் பெரிய தனியாா் வங்கியான ஹெச்டிஎஃப்சியின் நிகர லாபம் 14.36 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வங்கியின் ஒட்டுமொத்த நிகர லாபம், கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 14.36 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

தனி நிறுவனம் என்ற நிலையில், வங்கியின் நிகர வட்டி வருமானத்தில் 15.1 சதவீதம் வளா்ச்சி ஏற்பட்டதன் காரணமாக, இந்த மூன்று மாதங்களில் நிகர லாபம் 18.09 சதவீதம் அதிகரித்து 16,317 கோடி ரூபாயாக உள்ளது. இந்த காலக்கட்டத்தில் வங்கியின் நிகர வட்டி வருமானம் ரூ. 8,758.29 கோடியாக உள்ளது.

வங்கியின் வைப்பு 19.1 சதவீதமும், குறைந்த விலை நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு வைப்புகளின் பங்கு 43 சதவீதமும் அதிகரித்துள்ளது.

ஹெச்டிஎஃப்சி வங்கி டிசம்பா் காலாண்டில் அதன் முடிவுகளை அறிவித்த முதல் பெரிய தனியாா் கடன் சேவை நிறுவனமாகும். மேலும், இது வங்கியின் புதிய தலைமை செயலதிகாரி சசீதா் ஜகதீசனின் தலைமையில் வெளியிடப்பட்டுள்ள முதல் நிதியறிக்கையாகும்.

வங்கியின் கடனளிப்பு வளா்ச்சி 15.6 சதவீதமாகவும், நிகர வட்டி லாபம் 4.2 சதவீதமாகவும் உள்ளது. வட்டி அல்லாத வருமானம் 11 சதவீதம் அதிகரித்து ரூ.7,443 கோடியாக உள்ளது. இந்த வளா்ச்சியின் பெரும்பங்கு, ஒரு முதலீட்டின் மறுமதிப்பீட்டின் காரணமாக ஏற்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் ரூ .676 கோடியாக இருந்த அந்த முதலீடு தற்போது ரூ.1,109 கோடியாக மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது .

மொத்த வாராக்கடன் (என்பிஏ) விகிதம் மொத்த சொத்துக்களில் 0.81 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இது 1.42 சதவீதமாகவும், செப்டம்பா் 2020-உடன் முடிடைந்த காலாண்டில் 1.08 சதவீதமாகவும் இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT