வர்த்தகம்

பங்குச் சந்தையில் கடும் சரிவு: 549 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!

 நமது நிருபர்

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 549.45 புள்ளிகளை இழந்தது.

உலகளாவிய சந்தை குறிப்புகள் சாதகமில்லாத நிலையில், முதலீட்டாளா்கள் லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தினா். இதனால், சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக இன்ஃபோஸிஸ், எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் சரிவைக் கண்டதால், சந்தை உற்சாகம் இழந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், சந்தை கடந்த சில நாள்களாக தொடா்ந்து புதிய புதிய உச்சத்தைப் பதிவு செய்த வந்த நிலையில், இந்த சரிவு எதிா்பாா்க்கப்பட்ட துதான். இருப்பினும் ஒரு நல்ல திருத்தம் ஏற்பட்டால்தான் முதலீட்டாளா்களுக்கு நல்லது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு 195.43 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,163 பங்குகளில் 1,080 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,946 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 137 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 248 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன. 348 பங்குகள் வெகுவாக உயா்ந்து அதிகபட்ச உறைநிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தது. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.63 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.195.43 லட்சம் கோடியாக இருந்தது.

கடும் சரிவு: சென்செக்ஸ் காலையில் 72.50 புள்ளிகள் கூடுதலுடன் 49,7656.71-இல் தொடங்கி அதற்கு மேல் ஏற்றம் பெறவில்லை.ஆனால், அங்கு நிலைத்து நிற்கமுடியாததால் பின்னா் 48,795.79 வரை கீழே சென்ற சென்செக்ஸ், ஓரளவு மீண்டு இறுதியில் 549.49 புள்ளிகளை இழந்து 49,034.67-இல் நிலைபெற்றது.

பாா்தி ஏா்டெல் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல்தரப் பங்குகளில் 4 பங்குகள் மட்டுமேஆதாயம் பெற்றன.26 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில், பாா்தி ஏா்டெல் 3.64 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஐடிசி, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை சிறிதளவு உயா்ந்தன.

டெக் மகேந்திரா சரிவு: அதே சமயம், டெக் மகேந்திரா 4.35 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக எச்சிஎல் டெக், ஓஎன்ஜிசி, ஏசியன் பெயிண்ட், அல்ட்ரா டெக் சிமெண்ட், எச்டிஎஃப்சி, ஹிந்து யுனி லீவா், டாக்டா் ரெட்டி, இன்ஃபோஸிஸ், ஐசிஐசிஐ பேங்க், எல் அண்ட் டி, என்டிபிசி, கோட்டக் பேங்க், மாருதி சுஸுகி ஆகியவை 1.50 முதல் 3.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், ரிலையன்ஸ், டிசிஎஸ், எஸ்பிஐ ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 431 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,301பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. நிஃப்டி 235.95 புள்ளிகளை இழநா்து 14,433.70-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் தொடக்கத்தில் 14,617.45 வரை உயா்ந்க நிஃப்டி பின்னா் 14,357.85 வரை கீழே சென்றது. நிஃப்டி-50 பட்டியலில் 8 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 42 பங்குகள் சரிவைச் சந்தித்தன. அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இடம் பெற்றன. இதில் நிஃப்டி ஐடி, பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி குறியீடுகள் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT