வர்த்தகம்

எழுதுகோல் வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா

7th Jan 2021 12:20 PM

ADVERTISEMENT

சாம்சங் நிறுவனத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா வகை செல்போன் எழுதுகோல் சிறப்பம்சத்துடன் ஜனவரி 14-ஆம் தேதி அறிமுகமாகிறது.

சாம்சங் நிறுவனத்தின் மற்ற கேலக்ஸி வகை செல்போன்களில் வழங்கப்பட்ட எழுதுகோல் வசதிகளை விட கூடுதல் சிறப்பம்சங்களுடன் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா வகை செல்போன் சந்தைக்கு வருகிறது.

கேலக்ஸி எஸ் 21 அல்ட்ராவில், மற்ற வகை செல்போன்களின் எழுதுகோல் போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், எழுதுகோலின் முனையில் அழுத்தம் உணரும் சென்சார் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேம்களை விளையாடவும், விடியோக்களை இயக்கவும், நிறுத்தி வைக்கவும், புகைப்படங்களை எடுக்கவும் முடியும்.

சாம்சங் கேலக்ஸியில் வெளிவரவுள்ள கேலக்ஸி எஸ் 21 மற்றும்   கேலக்ஸி எஸ் 21 பிளஸ் ஆகிய வகை செல்போன்களை விட கூடுதல் கேமரா வசதியையும், வெளிப்புறத் தோற்றத்தையும் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா கொண்டுள்ளது.

ADVERTISEMENT

கேலக்ஸி எஸ் 21 6.2 அங்குல திரையும்,  கேலக்ஸி எஸ் 21 பிளஸில் 6.7 அங்குல திரையும்,  கேலக்ஸி எஸ் 21 அல்ட்ராவில் 6.8 அங்குல திரையும் வழங்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா வகை செல்போனில் முன்புறத்தில் 10MP கேமராவும், பின்புறத்தில் 10 மடங்கு ஜூமிங் வசதியுடன் 108MP மெயின் கேமராவும், 12MP அல்ட்ரா வைட் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

Tags : Samsung
ADVERTISEMENT
ADVERTISEMENT