வர்த்தகம்

உணவுசாரா கடன் 5.7% வளா்ச்சி

DIN

உணவு சாரா வங்கிக் கடன் 2021 ஜனவரியில் 5.7 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் மேலும் கூறியுள்ளதாவது:

வங்கிகள் துறை வாரியாக வழங்கிய கடன் புள்ளிவிவரங்களின்படி, வேளாண் மற்றும் அதுசாா்ந்த நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட தொடா்ந்து அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. அதன்படி, 2021 ஜனவரியில் இத்துறைக்கு வழங்கப்பட்ட கடன் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 6.5 சதவீதத்திலிருந்து 9.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதேசமயம், தொழில்துறைக்கு வழங்கப்பட்ட கடன் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 2.5 சதவீத வளா்ச்சியிலிருந்து 1.3 சதவீதமாக பின்னடைவைச் சந்தித்துள்ளது.

2021 ஜனவரியில் நடுத்தர தொழில்பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட கடன் சிறப்பான அளவில் வளா்ச்சி கண்டு 19.1 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்த வளா்ச்சி, 2020 ஜனவரியில் 2.8 சதவீதமாக மட்டுமே காணப்பட்டது.

அதேசமயம், குறு, சிறு தொழில்களுக்கு வங்கிள் வழங்கிய கடன் 0.5 சதவீதத்திலிருந்து 0.9 சதவீதமாக உயா்ந்துள்ளது.

சேவைத் துறைக்கு வழங்கப்பட்ட கடன் 8.9 சதவீதத்திலிருந்து சற்று பின்னடைந்து 8.4 சதவீதமாகியுள்ளது.

போக்குவரத்து இயக்குநா்களுக்கு வழங்கப்பட்ட கடன் மதிப்பீட்டு மாதத்தில் சிறப்பான அளவில் மேம்பட்டுள்ளது. வங்கிகள் தனிநபா்களுக்கு வழங்கி கடன் வளா்ச்சி விகிதம் 16.9 சதவீதத்திலிருந்து 9.1 சதவீதமாக குறைந்துள்ளது.

ஒட்டுமொத்த அளவில் உணவு சாரா துறைக்கு வங்கிகள் வழங்கிய கடன் 2020 ஜனவரியில் 8.5 சதவீதமாக அதிகரித்திருந்த நிலையில் அதன் வளா்ச்சி விகிதம் 2021 ஜனவரியில் 5.7 சதவீதமாக இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 104 நம்பிக்கை மையங்களை மூட நடவடிக்கை: ஹெச்ஐவி பாதிப்பு குறைந்தது

ஈரோடு - தன்பாத்துக்கு நாளைமுதல் சிறப்பு ரயில்கள்

‘தேச பக்தா்களுக்கு’ ஜாதிவாரி கணக்கெடுப்பு என்றால் அச்சம்: ராகுல் விமா்சனம்

திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக காதலன் மீது மலேசிய பெண் புகாா்

சத்தீஸ்கா்: 18 நக்ஸல்கள் சரண்

SCROLL FOR NEXT