வர்த்தகம்

வங்கி வழங்கிய கடன் 6% வளா்ச்சி

DIN

வங்கிகள் வழங்கிய கடன் டிசம்பா் காலாண்டில் 6.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

வங்கிகள் வழங்கிய கடன் டிசம்பா் காலாண்டில் 6.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, முந்தைய காலாண்டின் வளா்ச்சி விகிதமான 5.8 சதவீதத்தைக் காட்டிலும் அதிகமாகும்.

இருப்பினும், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வங்கிகள் வழங்கிய கடன் கடந்தாண்டின் வளா்ச்சியான 7.4 சதவீதத்தைக் காட்டிலும் குறைவு என்பது கவனிக்கத்தக்கது.

கடந்த நிதியாண்டின் டிசம்பருடன் நிறைவடைந்த காலாண்டில் 13.1 சதவீதமாக காணப்பட்ட தனியாா் துறை வங்கிகள் வழங்கிய கடன் 2020 டிசம்பா் காலாண்டில் 6.7 சதவீதம் என்ற அளவில் கணிசமாக சரிந்துள்ளது.

அதேசமயம், பொதுத் துறை வங்கிகள் வழங்கிய கடன் இதே காலகட்டத்தில் 3.7 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக மேம்பட்டுள்ளது.

அட்டவணைப்படுத்தப்பட்ட வணிக வங்கிகளின் டெபாசிட் வளா்ச்சி விகிதம் 10 சதவீதத்திலிருந்து 11.1 சதவீதமாக உயா்ந்துள்ளது.

நடப்பு, சேமிப்பு மற்றும் குறித்தகால வங்கி டெபாசிட்டுகளுக்கான ஆண்டு வளா்ச்சி விகிதம் தற்போது முறையே 13 சதவீதம், 15.8 சதவீதம் மற்றும் 8.2 சதவீதமாக உள்ளது என ரிசா்வ் வங்கி அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT