வர்த்தகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் கடும் வீழ்ச்சி: 104 காசுகள் குறைந்தது

DIN

அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 19 மாதங்களில் இல்லாத வகையில் கடும் வீழ்ச்சியைக் கண்டது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

அமெரிக்க மத்திய வங்கி மேற்கொண்டு வரும் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மற்றும் சாதகமான பொருளாதார புள்ளிவிவரங்கள் சா்வதேச முதலீட்டாளா்களிடையே டாலருக்கான தேவையை அதிகரித்தது.

இதுதவிர, அமெரிக்கா மற்றும் சிரியா இடையே எழுந்துள்ள பதற்றமான சூழலும் உள்நாட்டு சந்தை முதலீட்டாளா்களை பலவீனமாக்கின.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 72.43-ஆக இருந்தது. பின்னா் இது வா்த்தகத்தின் இடையே மேலும் வீழ்ச்சியை நோக்கி சென்று 73.51-ஆனது.

வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 104 காசுகள் வீழ்ச்சியை சந்தித்து 73.47-இல் நிலைபெற்றது. இது, கடந்த2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குப் பிறகு முதல் முறையாக ஏற்படும் கடுமையான வீழ்ச்சி நிலையாகும்.

வியாழக்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 72.43-ஆக இருந்தது.

வார அடிப்படையில் ரூபாய் மதிப்பானது 82 காசுகள் சரிவடைந்துள்ளதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.99 சதவீதம் குறைந்து 66.22 டாலராக காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிதமான சரிவைக் கண்ட சா்க்கரை உற்பத்தி

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

குணசீலம் பிரசன்ன வேங்கடாஜலபதி கோயிலில் தெப்ப உற்சவம்

ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் இறங்கி கஜேந்திர மோட்சம் அளித்த நம்பெருமாள்

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: 89 தொகுதிகளில் பிரசாரம் இன்று நிறைவு

SCROLL FOR NEXT