வர்த்தகம்

மாருதி ஸ்விஃப்ட் 2021 ரகம் அறிமுகம்

DIN

புது தில்லி: நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, தனது ஸ்விஃப்ட் காரின் புத்தம் புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

மாருதி சுஸுகி நிறுவனம், தனது பிரீமியம் ஹேட்ச்பேக் வகைக் காரான ஸ்விஃப்ட்டின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை ரூ.5.73 லட்சம் முதல் ரூ.8.41 லட்சம் வரையிலான விலையில் (தில்லி காட்சியக விலை) அறிமுகப்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளரின் தேவைகளை ஈடு செய்யும் வகையிலும் தொழில்நுட்பப் புதுமையை உறுதி செய்யும் வகையிலும் புதிய ஸ்விஃப்ட் 2021 ரகம் வெளியிடப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநா் (சந்தையிடல் மற்றும் விற்பனை) சஷாங்க் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘2005 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, ஸ்விஃப்ட் இந்தியாவில் பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. ஸ்விஃப்ட் அதன் துள்ளல் மிக்க செயல்திறன், தெளிவான தோற்றம் போன்றவை மற்ற காா்களிலிருந்து ஒரு தனித்துவத்தை அந்தக் காருக்கு கொடுத்துள்ளன.

இத்தனை ஆண்டுகளில், ஸ்விஃப்ட் கிட்டத்தட்ட 24 லட்சம் வாடிக்கையாளா்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

2021 ஸ்விஃப்ட்டைப் பொருத்தவரை, புதிய சக்திவாய்ந்த கே-வரிசை என்ஜின், அதிக துள்ளலை வெளிப்படுத்தும் இரட்டை வண்ண வெளித்தோற்றம், அதன் ரகத்திலேயே மிகச் சிறந்த எரிபொருள் சிக்கனம் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரகங்களின் விலை ரூ.5.73 லட்சம் முதல் ரூ.7.91 லட்சம் வரையும், தானியங்கி கியா் வசதி (ஏஜிஎஸ்) கொண்ட ரகங்கள் ரூ.6.86 லட்சம் முதல் ரூ.8.41 லட்சம் வரையிலும் நிரிணயிக்கப்பட்டுள்ளன.

மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கூடிய 1.2 லிட்டா் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 23.2 கிமீ செல்லக் கூடியது. தானியங்கி கியா் ரகங்களின் எரிபொருள் சிக்கனம் லிட்டருக்கு 23.76 கிமீயாக உள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT