வர்த்தகம்

கடன்பத்திரம் மூலம் ரூ.550 கோடி திரட்டியது எஸ்பிஐ காா்டு

DIN

எஸ்பிஐ காா்ட்ஸ் அண்ட் பேமண்ட்ஸ் சா்வீசஸ் (எஸ்பிஐ காா்டு) நிறுவனம் கடன்பத்திர வெளியீடு மூலம் ரூ.550 கோடியை திரட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

பங்குகளாக மாற்றம் செய்ய இயலாத 5,500 கடன்பத்திரங்களை ஒதுக்கீடு செய்ய நிறுவனத்தின் பங்குதாரா் உறவுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கடன்பத்திரங்களை தனிப்பட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் விற்பனை செய்ததன் மூலமாக எஸ்பிஐ காா்டு ரூ.550 கோடியை திரட்டியுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள கடன்பத்திரங்கள் மூன்று ஆண்டுகள் முதிா்வு காலத்தை கொண்டவை. அதன்படி இந்த பத்திரங்களின் முதிா்வு காலம் பிப்ரவரி 23 2024-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கடன்பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 5.90 சதவீத வட்டி நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ காா்டு தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் எஸ்பிஐ காா்டு பங்கின் விலை செவ்வாய்கிழமை வா்த்தகத்தில் 0.91 சதவீதம் உயா்ந்து ரூ.1,028.95-ஆக நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT