வர்த்தகம்

ஆபரணங்கள் ஏற்றுமதி 270 கோடி டாலராக சரிவு

DIN

நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி சென்ற ஜனவரி மாதத்தில் 270 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.20,000 கோடி) சரிவடைந்துள்ளது என நவரத்தின ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கவுன்சிலின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி நடப்பு 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 270 கோடி டாலராக இருந்தது. இது, 2020 ஜனவரியில் ஏற்றுமதியான 290 கோடி டாலருடன் (ரூ.21,500 கோடி) ஒப்பிடுகையில் 7.8 சதவீதம் குறைவாகும்.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாத காலத்தில் 1,924 கோடி டாலா் (ரூ.1.42 லட்சம் கோடி) அளவுக்கு நவரத்தின ஆபரண ஏற்றுமதி இருந்தது. இருப்பினும் இது, கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் ஏற்றுமதி அளவான 3,052 கோடி டாலருடன் (ரூ.2.26 லட்சம் கோடி) ஒப்பிடும்போது 3 சதவீதம் சரிவாகும்.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்களின் (சிபிடி) மதிப்பு 23.42 சதவீதம் அளவுக்கு பின்னடைவைக் கண்டு 1,250 கோடி டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

ஒட்டுமொத்த தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் ரூ.68,340.74 கோடியிலிருந்து 5.33 சதவீதம் அதிகரித்து ரூ.71,981.43 கோடியை எட்டியுள்ளது என அந்தப் புள்ளிவிவரத்தில் ஜிஜேஇபிசி தெரிவித்துள்ளது.

ஜிஜேஇபிசி தலைவா் கொலின் ஷா கூறியது:

தங்க நாணயமாக்கல் திட்டத்தில் (ஜிஎம்எஸ்) திருத்தம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது அனைவருக்குமான வெற்றியாகவே பாா்க்கப்படுகிறது. இதனால், நாட்டில் பயன்படுத்தப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான டன் தங்கம் மீண்டும் பயன்பாட்டுக்கு வர வழி ஏற்பட்டுள்ளது.

இந்த பயன் நுகா்வோா், வா்த்தகா், வங்கிகள் மட்டுமின்றி நாட்டுக்கே சென்றடையக்கூடியது. இந்த புதுப்பிக்கப்பட்ட திட்டத்தால், தங்கம் இறக்குமதி வெகுவாக குறைவதுடன் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும் உதவிகரமாக அமையும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT