இந்த வார வணிகத்தில் தொடர்ந்து உயர்ந்து வந்த பங்குச் சந்தை இன்று இறக்கத்துடன் முடிவடைந்தது.
நேற்று(டிச.29) ஏற்றத்தில் முடிந்த பங்குச்சந்தை இன்று எரிவாயு மற்றும் எரிபொருள் நிறுவன பங்குகளின் வீழ்ச்சியால் சரிவுடன் முடிந்தது.
நேற்று 57,806.49 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 57,755.40 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 12.17 புள்ளிகள் குறைந்து 57,794.32 புள்ளிகளுடன் நிலைபெற்றது .
17,213.60 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,201.45 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 9.65 புள்ளிகள் உயர்ந்து 17,203.95 புள்ளிகளில் நிலைபெற்றது.
தொடர்ந்து அதிகரித்து வரும் ஐடி மற்றும் வங்கிகளின் பங்குகள் தொடர்ந்து நிலையான ஏற்றத்தை தக்கவைத்திருக்கிறன.
இதையும் படிக்க| மெய்நிகர் வணிகம் 2: கிரிப்டோகரன்சியை ஆதரிக்கும், எதிர்க்கும் நாடுகள்