வர்த்தகம்

பங்குச் சந்தை எழுச்சி: 17,000 புள்ளிகளைக் கடந்த நிஃப்டி

23rd Dec 2021 04:36 PM

ADVERTISEMENT

இந்த வார வணிகத்தில் தொடர்ந்து மூன்றாவது  நாளாக  இன்று பங்குச்சந்தை உயர்வில் நிறைவடைந்தது.

கடந்த வார இறுதியில் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருந்த நிலையில் இந்த வார தொடக்க நாளான திங்கள்கிழமை ( டிச.20) பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1200 புள்ளிகளை இழந்து பெரிய வீழ்ச்சியுடன் நிலைபெற்றதுடன் 9 லட்சம் கோடி அளவு சந்தை மதிப்பை இழந்ததாகவும் தகவல் வெளியானது.

பின் கடந்த 2 நாள்களாக ஏற்றத்தில் முடிந்த பங்குச்சந்தை இன்றும் ஐடி மற்றும் வங்கிப் பங்குகளின் விற்பனையால்  நிறைவுடன் முடிந்தது.

நேற்று(டிச.22) 56,930.56  புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 57,251.15 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 384.72 புள்ளிகள் அதிகரித்து 57,315.28 புள்ளிகளுடன் நிலைபெற்றது .

ADVERTISEMENT

 

16,955.45 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,066.80 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 117.15 புள்ளிகள் உயர்ந்து 17,072.60 புள்ளிகளில் நிலைபெற்றது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT