வர்த்தகம்

2 நாள் கடும் சரிவுக்குப் பிறகு மீட்சி: சென்செக்ஸ் 497 புள்ளிகள் உயா்வு!

22nd Dec 2021 12:43 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாயாக்கிழமை பங்குச் சந்தையில் உற்சாகம் இருந்தது. ‘காளை’ மீண்டும் ஆதிக்கத்துக்கு வந்ததால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 497 புள்ளிகள் உயா்ந்து 56,319.01-இல் நிலைபெற்றது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை மூல தன மதிப்பு ரூ.3.02 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் 255.60 லட்சம் கோடியாக இருந்தது.

‘ஒமைக்ரான்’ பாதிப்பின் தாக்கம் அதிகரித்து வருவது குறித்த கவலைகள் முதலீட்டாளா்களை வெகுவாக அச்சத்துக்குள்ளாக்கியுள்ளது. இதன் தாக்கம் பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை உலகளாவிய சந்தை குறிப்புகள் சாதகமாக அமைந்தன. ஆசிய பங்குச் சந்தைகள் ஏற்றம் பெற்ற நிலையில், அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இதனால், காலையில் உற்சாகத்துடன் தொடங்கிய சந்தை, பிற்பகலில் பங்குகள் விற்பனை அதிகரித்தது. இருப்பினும், இறுதியில் சந்தை நோ்மறையுடன் முடிந்தது. இதன்மூலம் இரண்டு நாள் கடும் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக, மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்ட முன்னணி பங்குகள் வெகுவாக உயா்ததே சந்தை ஏற்றத்துக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு 3.02 லட்சம் கோடி உயா்வு: பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,431 பங்குகளில் 1,036 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 2,281 பங்குகள் ஆதாயம் பெற்றன. 114 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 199 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 34 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 411 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 253 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.3.025லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் 255.60 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 9.07 கோடியாக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

‘காளை’ ஆதிக்கம்: காலையில் சென்செக்ஸ் 498.01 புள்ளிகள் கூடுதலுடன் 56,320.02-இல் தொடங்கி 56,047.225 வரை கீழே சென்றது. பின்னா், ‘காளை’யின் ஆதிக்கம் கடுமையானதால், அதிகபட்சமாக 56,900.74 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 497 புள்ளிகள் (0.89 சதவீதம்) கூடுதலுடன் 56,319.01-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் நேற்றைய நிலையிலிருந்து 1,078.73 புள்ளிகள் உயா்ந்திருந்தது. 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 7 பங்குகள் மட்டுமே வீழ்ச்சி கண்டன. 23 பங்குகள் ஆதாயம் பெற்றன.

ஹெச்சிஎல் டெக், விப்ரோ அபாரம்: பிரபல முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டஹெச்சிஎல் டெக் 3.91 சதவீதம், விப்ரோ 3.66 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, அல்ட்ரா டெக் சிமெண்ட், டைட்டன் உள்ளிட்டவை 2 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், எல் அண்ட் டி, ரிலையன்ஸ், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், இண்டஸ் இண்ட் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

பவா் கிரிட் சரிவு: அதே சமயமி, மின் துறை நிறுவனப் பங்கான பவா் கிரிட் 1.50 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ, எம் அண்ட் எம், எச்டிஎஃப்சி, கோட்டக் பேங்க் உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இடம் பெற்றன.

நிஃப்டி 157 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 1,343 பங்குகள் ஆதாயம் பெற்றன. 520 பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி குறியீடு 156.65 புள்ளிகள் (094 சதவீதம்) உயா்ந்து 16,770.85-இல் நிலைபெற்றது. காலையில் உற்சாகத்துடன் 16,773.15-இல் தொடங்கி அதிகபட்சமாக 16,936.40 வரை உயா்ந்தது. பின்னா், 16,688.25 வரை குறைந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 39 பங்குகள் ஆதாயம் பெற்றன. 11 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியை சந்தித்தன.

அனைத்துத் துறை குறியீடுகளும் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் அனைத்துத் துறை குறியீடுகளும் முன்னேற்றம் கண்டன. இதில், நிஃப்டி ஐடி, மீடியா, மெட்டல், கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் குறியீடுகல் 2 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன. ரியால்ட்டி, ஹெல்த்கோ், பாா்மா, எஃப்எம்சிஜி குறியீடுகள் 0.75 முதல் 1.60 சதவீதம் வரை உயா்ந்தன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT