வர்த்தகம்

’மோட்டோ ஜி51 5ஜி’ ஸ்மார்ட்போன் விற்பனை ஆரம்பம்

16th Dec 2021 12:09 PM

ADVERTISEMENT

மோட்டோ நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ’ 'மோட்டோ ஜி51 5ஜி’ ஸ்மார்ட்போனை கடந்த டிச.10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருந்த நிலையில் தற்போது அதன் விற்பனை ஆரம்பமாகியிருக்கிறது.

’5ஜி’ தொழில்நுட்பம் என்பதால் பல சிறப்பு அம்சங்களை மேம்படுத்தி இந்த தயாரிப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. 

இதையும் படிக்க | வாகனங்களின் விலையை உயா்த்துகிறது டொயோட்டா

’மோட்டோ ஜி51 5ஜி' சிறப்பம்சங்கள் :

ADVERTISEMENT

* 6.8 இன்ச் அளவுகொண்ட  ஃபுல் எச்டி திரை 

* ஸ்னாப்டிராகன் 480

* உள்ளக நினைவகம்(ரேம்)  4 ஜிபி , கூடுதல் நினைவகம் 64 ஜிபி

*பின்பக்கம் 50எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 5 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 13 எம்பி அளவை கொண்டிருக்கிறது.

*5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

*ஆன்டிராய்டு 11 ஒஎஸ் 

* டைப்-சி போர்ட் 

ஸ்மார்ட்போனின் ஆரம்ப விற்பனை விலை ரூ.14,999  என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இன்று முதல் அமேசான் , பிளிப்கார்ட்டில் தளத்திலும் விற்பனைக்கு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT