வர்த்தகம்

1 ரூபாய்க்கு 10 எம்பி டேட்டா: ஜியோ புதிய திட்டம்

16th Dec 2021 01:15 PM

ADVERTISEMENT

ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளருக்கு புதிய பிளானை அறிமுகம் செய்திருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமான ஜியோ தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு 1 ரூபாய்க்கு 10 எம்பி என்கிற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இத்திட்டத்தின் படி ரூ.1-க்கு ரீச்சார்ஜ் செய்தால் கிடைக்கும் 10 எம்பி டேட்டாவை 30 நாள்கள் பயன்படுத்தலாம் என ஜியோ நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதுவே இந்தியாவின் மிகக்குறைந்த விலையில் உள்ள டேட்டா ரீச்சார்ஜ் ஆகும். 

முன்னதாக இதே திட்டத்தில் ரூ.1-க்கு 100 எம்பி இலவசம் என தெரிவித்து பின் ஜியோ தளத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

மேலும் , இந்தியாவில் கடந்த நவம்பா் மாதத்தில் 4ஜி பதிவிறக்க வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | 4ஜி பதிவிறக்க வேகத்தில் ஜியோ முதலிடம்

Tags : jio
ADVERTISEMENT
ADVERTISEMENT