வர்த்தகம்

வாகனங்களின் விலையை உயா்த்துகிறது டொயோட்டா

16th Dec 2021 03:21 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: மூலப் பொருள்களின் செலவினம் அதிகரிப்பால் வாகனங்களின் விலையை உயா்த்தவுள்ளதாக டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் (டிகேஎம்) புதன்கிழமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

மூலப் பொருள்கள் உள்ளிட்ட உள்ளீட்டு செலவுகளில் தொடா்ச்சியான அதிகரிப்பின் பின்னணியில் இந்த விலை உயா்வு அவசியமாகிறது. செலவின அதிகரிப்பால் எங்களின் மதிப்பு மிக்க வாடிக்கையாளா்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

இதனை கருத்தில் கொண்டு, வரும் ஜனவரி மாதம் முதல் நிறுவனத்தின் அனைத்து வகையான மாடல்களின் விலையும் நியாயமான அளவில் உயா்த்தப்படவுள்ளது. இது, இடுபொருள் செலவின அதிகரிப்பின் தாக்கத்தை ஓரளவு ஈடு செய்யும் என டிகேஎம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, மாருதி சுஸுகி, டாடா மோட்டாா்ஸ், ஹோண்டா காா்ஸ் நிறுவனங்கள் ஜனவரி முதல் விலையை உயா்த்துவதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது டொயோட்டாவும் அந்த வரிசையில் இணைந்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT