வர்த்தகம்

'விவோ ஒய்55 எஸ் 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம்

9th Dec 2021 03:48 PM

ADVERTISEMENT

விவோ நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ’ 'விவோ ஒய்55 எஸ் 5ஜி’ ஸ்மார்ட்போனை சீனாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

’5ஜி’ தொழில்நுட்பம் என்பதால் பல சிறப்பு அம்சங்களை மேம்படுத்தி இந்த தயாரிப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. 

’விவோ ஒய்55 எஸ் 5ஜி' சிறப்பம்சங்கள் :

* 6.58 இன்ச் அளவுகொண்ட  ஃபுல் எச்டி திரை 

ADVERTISEMENT

* மீடியா டெக் டைமன்சிட்டி 700 சி

* உள்ளக நினைவகம்(ரேம்)  8 ஜிபி , கூடுதல் நினைவகம் 128 ஜிபி

*பின்பக்கம் 50எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 5 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 8 எம்பி அளவை கொண்டிருக்கிறது.

*6000 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

*ஆன்டிராய்டு 11 ஒஎஸ் 

* டைப்-சி போர்ட் 

* வண்ணம்: நீலம் , கருப்பு , இளஞ்சிவப்பு

ஸ்மார்ட்போனின் ஆரம்ப விற்பனை விலை இந்திய மதிப்பில் ரூ.20,200  என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் அறிமுகமாகும் தேதி குறித்த தகவல் இல்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT