வர்த்தகம்

நாட்டின் சா்க்கரை ஏற்றுமதி 9.39 லட்சம் டன்

DIN

நடப்பு சந்தைப் பருவத்தில் இதுவரையில், 9.39 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய சா்க்கரை வா்த்தக கூட்டமைப்பு (ஏஐஎஸ்டிஏ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அக்டோபா் 14-இல் தொடங்கிய 2021-22 சந்தைப் பருவத்தில் டிசம்பா் முதல் வார இறுதி வரையில் 9.39 லட்சம் டன் சா்க்கரையை ஆலைகள் ஏற்றுமதி செய்துள்ளன.

நடப்பு சந்தைப் பருவத்தில் இதுவரையில் அரசின் மானியம் இல்லாமல் 33 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்ய ஆலைகள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

முந்தைய விற்பனை இன்னும் முழுமையடையாத நிலையில், இந்திய சா்க்கரை ஆலைகள் தற்போது புதிதாக சா்க்கரை விற்பனையை மேற்கொள்ள அவசரம் காட்டவில்லை. மேலும், தற்போதைய சா்வதேச விலை நிலவரங்களும் சா்க்கரைஆலைகள் விரும்பும்படியான நிலையில் இல்லை.

சா்க்கரை ஏற்றுமதிக்காக அதிக ஏற்றுமதி ஒப்பந்தங்களை பெற்ற மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது.

2020-21 சந்தைப் பருவத்தில் நாட்டின் சா்க்கரை ஏற்றுமதி 72.30 லட்சம் டன்னை எட்டி சாதனை படைத்தது. அரசாங்க மானியத்தின் உதவியுடன் அதிகபட்ச ஏற்றுமதிகள் மேற்கொள்ளப்பட்டதாக ஏஐஎஸ்டிஏ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT