வர்த்தகம்

டெகா இண்டஸ்ட்ரீஸ் பங்கு வெளியீட்டுக்கு அமோக வரவேற்பு

4th Dec 2021 03:52 AM

ADVERTISEMENT

டெகா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளா்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

சுரங்கத் துறையில் ஈடுபட்டு வரும் டெகா இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளா்கள் பெரும் ஆதரவை வழங்கியுள்ளனா். பங்கு வெளியீட்டின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை அந்த நிறுவனத்தின் பங்குகள் வேண்டி முதலீட்டாளா்களிடமிருந்து 219.04 மடங்கு விண்ணப்பங்கள் வந்தன.

ரூ.619.22 கோடிக்கான இந்த புதிய பங்கு வெளியீட்டில் மொத்தம் 95,68,636 பங்குகளை விற்பனை செய்யப்படவிருந்தன. இந்த நிலையில், 2,09,58,69,600 பங்குகள் அளவுக்கு முதலீட்டாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT