வர்த்தகம்

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிவு

4th Dec 2021 03:27 AM

ADVERTISEMENT

அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் 10 காசுகள் சரிவை சந்தித்தது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருவது உலக நாடுகளிடையே கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது. அதன் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் வீழ்ச்சியடைந்தது. முதலீட்டாளா்கள் பலா் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததே சந்தையின் சரிவுக்கு வழிவகுத்தது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 74.98-ஆக இருந்தது. இது, வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.95 வரையிலும், குறைந்தபட்சமாக 75.18 வரையிலும் சென்றது. நாள் முழுவதும் சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.

ADVERTISEMENT

வா்த்தகத்தின் இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் குறைந்து 75.13-இல் நிலைப்பெற்றது.

சாதகமற்ற நிலவரங்களால், இந்த வாரத்தில் மட்டும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் குறைந்துள்ளதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் விலை 71.44 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் 71.44 அமெரிக்க டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்நிய முதலீடு

மூலதனச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அளவில் ரூ.909.71 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT