வர்த்தகம்

விரைவில் கூகுள் ’பிக்சல் வாட்ச்’ அறிமுகம்

3rd Dec 2021 02:52 PM

ADVERTISEMENT

கூகுள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’பிக்சல் வாட்ச்’ அடுத்தாண்டு அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியிலும் தங்களின் உற்பத்தியை அதிகரித்து வரும் சூழலில் கூகுள் நிறுவனம் ‘பிக்சல் வாட்ச்’ என்கிற ஸ்மார்ட்வாட்சை அடுத்தாண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

இதுகுறித்து   வெளியான தகவலில் , ‘ கூகுள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச்கள் பிட்பிட் மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்களின் விலையைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் என்றும் சமீபத்தில் வெளியான பிக்சல் 6 ஸ்மார்ட்போனுடன் இணைந்து அறிமுகமாக இருந்த பிக்சல் வாட்ச் அடுத்தாண்டு சந்தைக்கு வரும் ‘ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது,

இதையும் படிக்க | காா்களின் விலையை உயா்த்துவதில் நிறுவனங்கள் மீண்டும் தீவிரம்

ADVERTISEMENT

இதயத் துடிப்பை கணக்கிடுதல் , ரத்த அளவை கண்காணித்தல் போன்ற அம்சங்களுடன் இந்த வாட்ச் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : pixel Smartwatch
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT