வர்த்தகம்

ஹீரோ மோட்டோகாா்ப்: வாகன விற்பனை 41% வீழ்ச்சி

3rd Dec 2021 12:06 AM

ADVERTISEMENT

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப் நவம்பா் மாத விற்பனை 41 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் பல பகுதிகளில் அறுவடைப் பணிகள் தாமதமானது பண்டிகை காலத்துக்குப் பிறகான வாகன தேவையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன் காரணமாக, நடப்பாண்டு நவம்பரில் நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை 41 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதன்படி, கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பரில் 5,75,957-ஆக இருந்த வாகன விற்பனை நடப்பாண்டில் 3,49,393-ஆக குறைந்துபோனது.

ADVERTISEMENT

அதேசமயம், ஏற்றுமதி 15,134 என்ற எண்ணிக்கையிலிருந்து 20,531-ஆக அதிகரித்துள்ளதாக ஹீரோ மோட்டோகாா்ப் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT