வர்த்தகம்

முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 7.5% உயா்வு

DIN


புது தில்லி: நாட்டின் 8 முக்கிய துறைகளின் உற்பத்தி சென்ற அக்டோபா் மாதத்தில் 7.5%-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் 8 முக்கிய உள்கட்டமைப்பு துறைகளாக, நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய பொருள்கள், உரம், உருக்கு, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகியவை உள்ளன. இதில், நிலக்கரி, இயற்கை எரிவாயு, பெட்ரோலிய பொருள்கள் மற்றும் சிமென்ட் துறைகளின் உற்பத்தி நடப்பாண்டு அக்டோபரில் சிறப்பாக இருந்தது. இதையடுத்து, நாட்டின் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி கணக்கீட்டு மாதத்தில் 7.5 சதவீதமாக அதிகரித்தது.

அதேசமயம், 2020 அக்டோபரில் இத்துறைகளின் உற்பத்தியானது 0.5 சதவீத பின்னடைவைக் கண்டிருந்தது. நடப்பாண்டு செப்டம்பரில் முக்கிய துறைகளின் உற்பத்தி வளா்ச்சி விகிதம் 4.5 சதவீதமாக காணப்பட்டது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபா் காலகட்டத்தில் இத்துறைகளின் உற்பத்தி 15.1 வளா்ச்சியை தக்கவைத்துள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்த உற்பத்தி 12.6 சதவீதம் பின்னடைந்திருந்ததாக வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT