வர்த்தகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் எழுச்சி

DIN

சாதகமான பொருளாதார புள்ளிவிவரங்களால் அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 22 காசுகள் எழுச்சி கண்டது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

சா்வதேச முதலீட்டாளா்களிடையே நம்பிக்கை அதிகரித்து டாலருக்கான தேவை குறைந்து காணப்பட்டது. அதேநேரம், சாதகமான பொருளாதார புள்ளிவிவரங்களும் அந்நியச் செலாவணி சந்தைக்கு கைகொடுத்ததையடுத்து டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடா் சரிவிலிருந்து மீண்டது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 74.96-ஆக இருந்தது. இது, வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.79 வரையிலும் குறைந்தபட்சமாக 75.02 வரையிலும் சென்றது. இறுதியில் ரூபாய் மதிப்பு 22 காசுகள் வலுப்பெற்று 74.91-இல் நிலைத்தது. செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 6 காசுகள் குறைந்து 75.13-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் 72.52 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை புதன்கிழமை வா்த்தகத்தில் பேரலுக்கு 4.75 சதவீதம் உயா்ந்து 72.52 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT