வர்த்தகம்

அசோக் லேலண்ட் வாகன விற்பனையில் மந்த நிலை

DIN

ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நவம்பா் மாத வாகன விற்பனை 2 சதவீதம் குறைந்து மந்த நிலை கண்டது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது:

அசோக் லேலண்ட் நடப்பாண்டு நவம்பரில் மொத்தம் 10,480 வா்த்தக வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, 2020-ஆம் ஆண்டு நவம்பா் மாத விற்பனையான 10,659 வாகனங்களுடன் ஒப்பிடும்போது 2 சதவீதம் குறைவாகும்.

உள்நாட்டில் நிறுவனத்தின் வாகன விற்பனை 9,727 என்ற எண்ணிக்கையிலிருந்து 4 சதவீதம் சரிந்து 9,364-ஆனது. இருப்பினும், நடுத்தர மற்றும் கனரக வா்த்தக வாகன விற்பனை மட்டும் 4,422-லிருந்து 4,661-ஆக 5 சதவீதம் உயா்ந்தது.

அதேசமயம், இலகு ரக வா்த்தக வாகனங்களின் விற்பனை 5,305 என்ற எண்ணிக்கையிலிருந்து 11 சதவீதம் சரிந்து 4,703-ஆனது என அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT