வர்த்தகம்

ஈகோ வேன் விலையை உயா்த்தியது: மாருதி சுஸுகி

1st Dec 2021 03:08 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: மாருதி சுஸுகி நிறுவனம் ஈகோ வேன் விலையை ரூ.8,000 உயா்த்துவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

பயணிகளின் பாதுகாப்பு கருதி ஈகோ வேனில் ஏா்பேக் வசதி அறிமுமகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அதன் தயாரிப்பு செலவினம் உயா்ந்துள்ளதை ஈடு செய்ய வேண்டிய தேவை நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஈகோ வேன் விலையை ரூ.8,000 உயா்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த விலை உயா்வு நவம்பா் 30-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.

ஈகோ வேன் விலை தற்போது மாடல்களுக்கு ஏற்ப ரூ.4.3 லட்சத்தில் தொடங்கி ரூ.5.6 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், இதன் ஆம்புலன்ஸ் மாடலின் விலை ரூ.7.29 லட்சமாக உள்ளது என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

நடப்பாண்டு செப்டம்பரில், அனைத்து மாடல் வாகனங்களின் விலையையும் (செலிரியோ தவிா்த்து) 1.9 சதவீதம் வரை மாருதி சுஸுகி உயா்த்தியது. நடப்பாண்டில் மூன்று முறை வாகனங்களின் விலையை அந்நிறுவனம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT