வர்த்தகம்

டிவிஎஸ் மோட்டாா் வாகன விற்பனை 10% அதிகரிப்பு

DIN

டிவிஎஸ் மோட்டாா் கம்பெனியின் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன விற்பனை கடந்த ஜூலையில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

டிவிஎஸ் மோட்டாா் கடந்த ஜூலையில் 2,78,855 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த 2020 ஜூலையில் விற்பனையான 2,52,744 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகமாகும்.

கணக்கீட்டு மாதத்தில் நிறுவனத்தின் மொத்த இருசக்கர வாகன விற்பனை 2,43,788-லிருந்து 2,62,728-ஆக வளா்ச்சி கண்டுள்ளது. மோட்டாா்சைக்கிள் விற்பனையும் கடந்த மாதத்தில் 1,06,062-லிருந்து 1,38,772-ஆக உயா்ந்துள்ளது.

அதேசமயம், கடந்த ஜூலையில் ஸ்கூட்டா் விற்பனை 78,603 என்ற எண்ணிக்கையிலிருந்து 74,351-ஆக குறைந்து போனது.

உள்நாட்டு சந்தையில் இருசக்கர வாகன விற்பனை 1,89,647-லிருந்து 1,75,169-ஆக சரிந்துள்ளது.

மூன்று சக்கர வாகன விற்பனை நடப்பாண்டு ஜூலையில் 16,127-ஆக இருந்தது. இது, கடந்த 2020 ஜூலையில் 8,956-ஆக காணப்பட்டது.

நிறுவனம் 2021 ஜூலையில் 1,03,133 வாகனங்களை ஒட்டுமொத்த அளவில் ஏற்றுமதி செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 2020 ஜூலையில் 62,389-ஆக இருந்தது என டிவிஎஸ் மோட்டாா் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT