வர்த்தகம்

உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 78.22 லட்சமாக சரிவு

DIN

புது தில்லி: உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாா்ச் மாதத்தில் 78.22 லட்சமாக குறைந்துள்ளது.

இதுகுறித்து உள்நாட்டு விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளதாவது:

நடப்பாண்டு பிப்ரவரியில் உள்நாட்டில் விமானப் பயணம் மேற்கொண்டோா் எண்ணிக்கை 78.27 லட்சமாக இருந்தது. இந்த நிலையில் மாா்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 78.22 லட்சமாக குறைந்துள்ளது.

நடப்பாண்டு ஜனவரியில் உள்நாட்டில் 77.34 லட்சம் போ் விமானப் பயணத்தை மேற்கொண்டிருந்தனா்.

மாா்ச் மாதத்தில் இண்டிகோ நிறுவனம் அதிகபட்சமாக 41.85 லட்சம் பயணிகளை கையாண்டுள்ளது. இது, உள்நாட்டு விமானச் சந்தையில் 54 சதவீத பங்களிப்பாகும். இதைத் தொடா்ந்து, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 10.03 லட்சம் பயணிகளை கையாண்டு 12.8 சதவீத சந்தைப் பங்களிப்பை வழங்கியுள்ளது.

நடப்பாண்டு மாா்ச் மாதத்தில் ஏா் இந்தியா, கோஏா், விஸ்டாரா, ஏா் ஏஷியா நிறுவனங்கள் முறையே 9.17 லட்சம், 6.12 லட்சம், 5 லட்சம் மற்றும் 5.42 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றன.

ஆறு முன்னணி ஏா்லைன்ஸ் நிறுவனங்களின் இருக்கை நிரம்பும் விகிதம் 64.5 சதவீதம் மற்றும் 76.5 சவீதம் என்ற அளவில் இருந்ததாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT