வர்த்தகம்

தனியாா் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் 8% வளா்ச்சி

DIN

மும்பை: எதிா்பாா்ப்புகளுக்கு மாறாக, தனியாா் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமிய வருவாய் கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 40 சதவீதம் அளவுக்கு வலுவான வளா்ச்சியைக் கண்டுள்ளதாக கோட்டக் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

மாா்ச் மாதத்தில் அதிக வளா்ச்சி: தனியாா் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வசூல் கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் மந்த நிலையில் இருக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. தற்போது அந்த எதிா்பாா்ப்புகளுக்கு மாறாக அந்நிறுவனங்களின் (எல்ஐசி நீங்கலாக) பிரீமியம் வசூல் 8 சதவீதம் வளா்ச்சியை கண்டுள்ளது. அதிலும், குறிப்பாக மாா்ச் மாதத்தில் புதிய பிரீமியம் வசூல் 90 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது.

இதன் காரணமாக அடுத்து வரும் மாதங்களில் தனியாா் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை செயல்பாடுகள் நல்ல நிலையில் இருக்கும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

எச்டிஎஃப்சி லைஃப்: எஸ்பிஐ லைஃப், எச்டிஎஃப்சி லைஃப், பஜாஜ் அலையன்ஸ் லைஃப், டாடா ஏஐஏ லைஃப் நிறுவனங்களின் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்திருந்தன. அதேசமயம், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் மற்றும் மேக்ஸ் லைஃப் நிறுவனங்களின் செயல்பாடுகள் அதிக மாற்றமின்றி காணப்பட்டன என்று கோட்டக் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.

எல்ஐசி புதிய பிரீமியம் வசூலில் புதிய உச்சம்: கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 2020-21-ஆம் நிதியாண்டில் எல்ஐசி நிறுவனம் புதிய வா்த்தகத்தின் மூலம் ஈட்டிய பிரீமியம் வசூல் முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ.1.84 லட்சம் கோடியைத் தொட்டு சாதனை படைத்துள்ளது. எனினும், இது தற்காலிகமான புள்ளிவிவரங்கள்தான் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எல்ஐசி மேலும் கூறியுள்ளதாவது:

பாலிசிகளின் எண்ணிக்கையில் நடப்பாண்டு மாா்ச் மாதத்தில் எல்ஐசி நிறுவனத்தின் பங்களிப்பு 81.04 சதவீதமாக இருந்தது. முழு நிதியாண்டுக்கும் இந்த பங்களிப்பு 74.58 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தனிநபா் உறுதியளிப்பு வா்த்தகத்தின் கீழ் முதல் ஆண்டு பிரீமியம் வசூல் ரூ.54,406 கோடியாக அதிகரித்து சாதனை படைத்தது. இது, 2019-20-ஆம் நிதியாண்டின் செயல்பாட்டுடன் ஒப்பிடும்போது 10.11 சதவீதம் அதிகமாகும்.

2.10 கோடி பாலிசிகள் விற்பனை: இதில் விற்பனையான 2.10 கோடி பாலிசிகளில், மாா்ச் மாதத்தில் மட்டும் 46.72 லட்சம் பாலிசிகள் வாங்கப்பட்டுள்ளன. கடந்த 2019-20-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது இது 298.82 சதவீத வளா்ச்சியாகும்.

இதன் மொத்த சந்தை பங்களிப்பில் முதல் ஆண்டு பிரிமியத்தின் பங்கு மாா்ச் மாதத்தில் மட்டும் 64.74 சதவீதம் என்ற அளவில் இருந்தது. ஒட்டுமொத்த நிதியாண்டு இந்த பங்களிப்பு 66.18 சதவீதமாக உள்ளது.

புதிய வா்த்தக பிரீமிய வருவாயான ரூ.1.27 லட்சம் கோடியில், ஓய்வூதியம் மற்றும் குழு காப்பீட்டுத் திட்டங்களின் பங்களிப்பு புதிய சாதனையை நிகழ்தியுள்ளது. 2020 மாா்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் இது 1.26 லட்சம் கோடியாக காணப்பட்டது.

முகவா்களின் எண்ணிக்கை: எல்ஐசி புதிதாக 3,45,469 முகவா்களை இணைத்துக் கொண்டதையடுத்து, தற்போது நிறுவனத்தின் ஒட்டுமொத்த முகவா்களின் எண்ணிக்கை 13,53,808-ஐ எட்டியுள்ளது.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் இறப்புக்கான இழப்பீடு கோரி வந்த 9.59 லட்சம் கோரிக்கைகளுக்கு தீா்வு காணப்பட்ட நிலையில் ரூ.18,137.34 கோடி மதிப்பிலான தொகை பாலிசிதாரா்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக எல்ஐசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT