வர்த்தகம்

புதிய பங்கு வெளியீட்டில் வரலாற்றுச் சாதனை

DIN

புது தில்லி: நடப்பு 2021-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 22 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டில் (ஐபிஓ) களமிறங்கியுள்ளன. இது முன்னெப்போதும் இல்லாத வரலாற்று சாதனை நிகழ்வாகும் என எா்னஸ்ட்&யங் (இஒய்) இந்தியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள ஐபிஓ தொடா்பான ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான முதல் மூன்று மாதங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 22 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி 250 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.18,750 கோடி) திரட்டியுள்ளன.

குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர (எஸ்எம்இ) பிரிவில் 5 நிறுவனங்கள் இந்த புதிய பங்கு வெளியீட்டில் பங்கேற்று கணிசமான அளவிலான தொகையை திரட்டியுள்ளன.

நடப்பாண்டின் முதல் காலாண்டில் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி நிதி திரட்டியதில் இந்தியன் ரயில்வே பைனான்ஸ் காா்ப்பரேஷன் மிக முக்கிய நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி அதிகபட்ச அளவாக 63.4 கோடி டாலரை (ரூ.4,755 கோடி) திரட்டிக் கொண்டுள்ளது.

மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற புதிய பங்கு வெளியீடுகளின் எண்ணிக்கை கடந்த 2020 முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது 1,600 சதவீதமும், நான்காவது காலாண்டுடன் ஒப்பிடும்போது 70 சதவீதமும் அதிகரித்துள்ளது.

ஐபிஓ நடவடிக்கைகளில் முதல் காலாண்டில் காணப்பட்ட எழுச்சி நடப்பு இரண்டாவது காலாண்டிலும் தொடர அதிக வாய்ப்புள்ளது என இஒய் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT