வர்த்தகம்

கரோனா பரவல் எதிரொலி! அனைத்து ஆலைகளிலும் உற்பத்தியை நிறுத்துகிறது ஹீரோ மோட்டோகாா்ப்

DIN

புது தில்லி: நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப் கரோனா பரவல் காரணமாக தனது ஆலைகளில் வாகன உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நாடு முழுவதும் கரோனா பரவல் மிக வேகமாகி வருகிறது. பணியாளா்களின் நலன் மற்றும் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஏப்ரல் 22 முதல் மே 1 வரையில் ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனத்துக்குச் சொந்தமான அனைத்து ஆலைகளிலும் உற்பத்தி பணிகளை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், குளோபல் பாா்ட்ஸ் சென்டரும் (ஜிபிசி) அடங்கும். இந்த உற்பத்தி நிறுத்த வாய்ப்பை பயன்படுத்தி ஆலைகளில் தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஆலைகளிலும் உற்பத்தி பணிகள் நிறுத்தப்படுவதால் இது நிறுவனத்தின் வாகன தேவையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்த உற்பத்தி இழப்பு காலாண்டின் எஞ்சியுள்ள பகுதியில் ஈடு செய்யப்படும் என ஹீரோ மோட்டோகாா்ப் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனத்துக்கு ஹரியாணாவில் தாருகேரா, குருகிராம், ஆந்திராவில் சித்தூா், உத்தரகாண்டில் ஹரித்துவாா், ராஜஸ்தானில் நீம்ரனா மற்றும் குஜராத்தில் ஹலால் ஆகிய இடங்களில் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகள் ஆண்டுக்கு ஒட்டுமொத்தமாக 90 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

SCROLL FOR NEXT