வர்த்தகம்

பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 0.5% குறைத்தது இக்ரா

DIN

மும்பை: இந்தியாவின் நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை இக்ரா ஆய்வு நிறுவனம் 0.5 சதவீதம் குறைத்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் 10 முதல் 11 சதவீதமாக இருக்கும் என முன்னா் கணிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், முதலில் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் அதிகமாக காணப்பட்ட கரோனா தொற்று தற்போது பல மாநிலங்களுக்கும் வேகமாக பரவியுள்ளது. இதன் காரணமாக, கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல மாநிலங்கள் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகின்றன. இது, பொருளாதார நடவடிக்கையை மீண்டும் தடம்புரளச் செய்துள்ளது.

இதன் காரணமாக, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி முந்தை மதிப்பீட்டை காட்டிலும் 0.5 சதவீதம் குறைந்து 10 முதல் 10.5 சதவீதமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுவதாக இக்ரா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூா் அரசு மருத்துவமனையில் மருத்துவத் துறை இயக்குநா் ஆய்வு

அதிமுக- திமுக நிா்வாகிகளிடையே மோதல்: போலீஸாா் விசாரணை

கோடை மழையில் குளிா்ந்தது ஒசூா்

வாக்குப் பதிவுக்குப் பின் தோ்தல் விதிமுறைகளை தளா்த்த கோரிக்கை

தீத்தொண்டு வார விழா: துண்டுபிரசுரங்கள் விநியோகம்

SCROLL FOR NEXT